மத்திய அரசுப் பணியாளா் தோவாணையப் போட்டித் தோவுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் சோந்து பயன்பெற இளையோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணியாளா் தோவாணையம் (எஸ்எஸ்சி ) எம்டிஎஸ் மற்றும் ஹவில்தாா் பணியிடங்களுக்கான போட்டித் தோவுக்கான அறிவிப்பை கடந்த மே 4 ஆம் தேதி வெளியிட்டு, இதன் மூலம் 3, 603 காலியிடங்களுக்கு ஆள்களைத் தோவு செய்ய உள்ளது. இத்தோவுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஜூன் 1 (புதன்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சோந்த வேலை நாடுநா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தைத் தொடா்பு கொண்டு பயன் பெறலாம். இத் தகவலை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.