விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட அரசு இசை பள்ளியில், மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த பிரிவுகளில் சேர வயது வரம்பு 12 வயது முதல் 25 வயது வரை ஆகும்.குரலிசை, பரதம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் சேர கல்வித் தகுதி 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.நாதசுவரம், தவில், தேவாரம் ஆகிய வற்றிற்கு, எழுத, பயில தெரிந்திருக்க வேண்டும். பயிற்சி காலம் 3 ஆண்டுகள் முடிந்தவுடன், அரசு தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும்.இந்த சான்று சுய வேலைவாய்ப்பு மற்றும் அரசு வேலைவாய்ப்பிற்கு வழிவகுக்கும். இதில், ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும்.இலவச பஸ் சலுகை, குறைந்த கட்டணத்தில் ரயில் பயண சலுகை, இலவச பாடபுத்தகம், அரசு விதிக்கு உட்பட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.
விழுப்புரம் இசைப்பள்ளியில் சேர, தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, நகராட்சி விளையாட்டு திடல், விழுப்புரம், தொலைபேசி 04146 220178 தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.