மாணவர்களின் வசதிக்காக சென்னையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா அவர்கள் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி நடத்தி வரும் குரூப் 4 தேர்வுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும் இந்த பயிற்சி வகுப்புகள் குறித்த விவரங்களுக்கு 9499966023 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.