உதவித்தொகையுடன் தொழிற்பழகுனர் பயிற்சி
முகாம்
சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு,
தனியார் தொழிற்சாலைகள், ஆண்டுதோறும் மாத உதவித்தொகையுடன், தொழிற்பழகுனர் பயிற்சி அளிக்க வேண்டும்.
அதன் நிறைவில் தொழிற்பழகுநர் சான்று, மத்திய அரசால்
வழங்கப்படும்.
இதற்காக,
தொழிற்சாலைகள், ஐ.டி.ஐ.,
டிப்ளமோ, டிகிரி மாணவர்களை
இணைக்கும் பொருட்டு மாதந்தோறும், 2வது திங்களன்று, தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
அதன்படி,
சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், வரும்,
13 காலை, 10.00 முதல் மாலை,
5.00 மணிவரை முகாம் நடக்கிறது.
பயிற்சி
பெறாத ஐ.டி.ஐ.,
டிப்ளமோ, டிகிரி முடித்த
மாணவர்கள், உண்மை சான்று,
முழு விபரத்துடன் பங்கேற்று
பயன்பெறலாம்.