அரசு இசைப்
பள்ளியில் மாணவா் சேர்க்கை
மயிலாடுதுறை மாவட்ட அரசு இசைப்
பள்ளியில் 3 வருட முழுநேர
அரசு சான்றிதழ் பயிற்சி
2022-2023ம் ஆண்டிற்கான மாணவா்
சேர்க்கை நடைபெறுகிறது என
மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு
இசைப்பள்ளி, புழுகாப்பேட்டை தெரு,
சீா்காழியில் இயங்கி
வருகிறது. தமிழக அரசின்
கலைப் பண்பாட்டு துறையின்
கீழ் இயங்கிவரும் இந்தப்
பள்ளியில் குரலிசை, நாகசுரம்,
தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய
கலைகளுக்கு 3 வருட முழு
நேர பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழக அரசின் சான்றிதழ்
வழங்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் பயிலும் மாணாக்கா்களுக்கு அரசு
விதிகளின் படி இலவச
விடுதி வசதி, அரசு
கல்வி உதவித்தொகை, இலவச
பேருந்து கட்டண சலுகைகள்
மற்றும் மாதந்தோறும் கல்வி
ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் சேர்வதற்கு 12 முதல் 25 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
குரலிசை, பரதநாட்டியம், வயலின்,
மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ஆம் வகுப்பு தோச்சி
பெற்றிருத்தல் போதுமானது.
நாகசுரம், தவில், தேவாரம்
ஆகிய கலைகளுக்கு தமிழ்
எழுத படிக்க தெரிந்தால் போதுமானது.
ஆண்டுக்கு
கல்வி கட்டணம் ரு.
350 செலுத்த வேண்டும். மாணவ,
மாணவியா் சேர்க்கை 1.6.2022 முதல்
நடைபெற்றுவருகிறது. ஆண்
மற்றும் பெண் இருபாலரும் சேரலாம்.