தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற 30.08.2023 முதல் நடைபெற உள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்வு- 2023 பதவிகளுக்காக 3,359 காலிப்பணியிடங்கள் உள்ளது. கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு 18.08.2023 முதல் 17.09.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 30.08.2023 முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் இந்த https://t.ly/zm2VH இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் தொலைபேசி எண் 04342-296188 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.