மதுரையில் தகுதித் தேர்வில் பங்கேற்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மதுரை தொழில்சார் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் கலைச்செல்வம் அறிக்கை: தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டியலிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்தப்பட உள்ளது.
இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 28ம் தேதி முதல் நேரடி வகுப்புகளாக தொடங்கி நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் மதுரை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழிழ்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0452 -2564343 என்ற என்ற எண்ணிலோ அல்லது (peeomadurai27@gmail.com) மெயில் ஐ.டி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.