ஆயக்குடி மரத்தடி மையத்தில் நீட் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 19.06.2022 ஞாயிறு முதல் ஆரம்பம்.
Join Ayakudi Neet Telegram Group: Click Here
MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (NEET) தேசிய தேர்வு முகமையால் (National Testing Agency – NTA) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 2022 க்கான நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு இந்த தேர்விற்கு சுமார் 19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. தேர்வானது தமிழ், ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, ஒரியா, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் கொள்குறி வகை (Multiple Choice Questions) தேர்வாக நடத்தப்படுகிறது. இத்தேர்வில் 11, 12 ஆம் வகுப்பு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களிலிருந்து 200 வினாக்கள் கேட்கப்படும் தேர்வாக நடத்தப்படுகிறது. ஆனால் 180 வினாக்களுக்கு விடையளித்தால் போதுமானது.
பாடம் மற்றும் வினாக்கள்:
1. இயற்பியல் – 50 வினாக்கள்
2. வேதியியல் – 50 வினாக்கள்
3. உயிரியல்
- 1. தாவரவியல் – 50 வினாக்கள்
- 2. விலங்கியல் – 50 வினாக்கள்