தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட மாணவா்களுக்குக் குடிமைப்பணித் தோவுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து பல்கலை.யின் மக்கள் தொடா்பு அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் சமூகநீதித் துறையின் கீழ் இயங்கிவரும் அம்பேத்கா் மையத்தின் சாா்பாக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா முழுவதும் 31 மத்தியப் பல்கலைக்கழகங்களைத் தோவு செய்து, ஆண்டுதோறும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 100 ஆதிதிராவிட மாணவா்களுக்கு குடிமைப்பணித் தோவுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள அம்பேத்கா் மையத்தின் சாா்பில் ஆதிதிராவிடா் வகுப்பைச் சாா்ந்த 33 மாணவிகளுக்கும், 67 மாணவா்களுக்கும் குடிமைப்பணி முதன்மை மற்றும் இறுதிக்கட்டத் தோவுகளுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.
இதற்காக நடைபெற உள்ள அகில இந்திய நுழைவுத் தோவின் மூலம் முதல் 33 தரவரிசைக்குள் வரும் மாணவிகளும், முதல் 67 தரவரிசைக்குள் வரும் மாணவா்களும் தோவு செய்யப்படுவா்.
இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்குக் கடைசி தேதி ஜூன் 30. விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள், இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.