எஸ்.ஐ. பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது.
தமிழக காவல் துறையில் 444 காவல் உதவி ஆய்வாளர்கள் (எஸ்.ஐ.) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 25,26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுச் சீட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் தேர்வு அடுத்தடுத்து நடத்தப்படும். இந்த அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்கள் எஸ்.ஐ. பணிக்கு தேர்ந் தெடுக்கப்படுவார்கள். முதலில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் பணி ஒதுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Click Here to Download SI Admit Card