TAMIL MIXER EDUCATION-ன் விருது பற்றிய செய்திகள்
வாழ்நாள் சாதனை
புரிந்தவர்கள் பத்ம
விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
வாழ்நாள்
சாதனை புரிந்தவர்கள் பத்ம
விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்
தெரிவித்துள்ளார்.
2023ம்
ஆண்டு இந்திய அரசின்
சார்பில் கலை, இலக்கியம்,
விளையாட்டு, மருத்துவம், அறிவியல்,
பொருளியல், வணிகம், தொழிற்சாலை ஆகிய பிரிவுகளில் வாழ்நாள்
சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம
விருது வழங்கப்பட உள்ளது.
இந்திய அரசின் உயரிய
விருதான இதற்கு மலைவாழ்,
மக்கள் சமூகத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலன், பெண்கள்
பாதுகாப்பு ஆகியவற்றில் சாதனை
புரிந்தவர்களுக்கு இதில்
முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பங்கள் மற்றும் மேலும் தகவல்களுக்கு www.padmaawards.gov.in
என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். மேலும்,
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் திருவண்ணாமலை மாவட்ட
விளையாட்டு மற்றும் இளைஞர்
நல அலுவலர்களிடம் வருகிற
செப்டம்பர் 15ம் தேதி
சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல்
விவரங்களை பெற மாவட்ட
விளையாட்டு மற்றும் இளைஞர்
நல அலுவலரை 04175 233169 என்ற
தொலைபேசி எண்ணில் அலுவலக
வேலை நாட்களில் தொடர்பு
கொண்டு பேசலாம்.
Last
Date: 15.09.2022