TAMIL MIXER EDUCATION-ன்
TNUSRB செய்திகள்
தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி
மதுரை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்பட்டு வரும் தன்னார்வ
பயிலும் வட்டத்தின் சார்பில்
போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற்று
வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா்
தேர்வு வாரியம் நடத்த
உள்ள இரண்டாம் நிலைக்
காவலா், சிறை வார்டன்
மற்றும் தீயணைப்புக் காவலா்
ஆகிய போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட
உள்ளன.
மேலும்
போட்டித்தேர்வுகளுக்கான பல்வேறு
புத்தகங்கள் அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
போட்டித்தேர்வா்கள் புத்தகங்களை எடுத்து அலுவலகத்திலேயே படித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
அத்துடன்
போட்டித்தேர்வா்கள் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற
இணையதளத்தில் தங்களது
பெயரை உள்ளீடு செய்து,
போட்டிதேர்வுக்கான பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து
கொண்டு பயன்பெறலாம்.
மேலும்
கல்வித்தொலைக்காட்சி அலைவரிசையில் வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறையின் சார்பாக
போட்டித்தேர்வுக்கு தயாராகும்
மாணவ, மாணவியருக்காக காலை
7 மணி முதல் 9 மணி
வரையிலும் மீண்டும் மாலை
7 மணி முதல் 9 வரையிலும்
போட்டித்தேர்வுகளுக்கென எடுக்கப்படும் பயிற்சி வகுப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பங்கேற்க
விரும்பும் மாணவா்கள் போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்த படிவம்
நகல், கடவுச்சீட்டு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை
நகல் ஆகியவற்றுடன் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here