TAMIL
MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
தூத்துக்குடியில் தொழில்
பழகுநா் சேர்க்கை முகாம்; பயிற்சியின் போது
உதவித் தொகை வழங்கப்படும்
இதுகுறித்து தூத்துக்குடி
மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திறன்
மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை
சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் பழகுநா் சேர்க்கை
முகாம் ஜூலை 11ம்
தேதி காலை 9 மணி
அளவில் கோரம்பள்ளத்தில் உள்ள
அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது.
முகாமில்
இதுவரை தொழில்பழகுநா் பயிற்சி
(அப்ரண்டிஸ்) பெறாதவா்கள் மற்றும்
2017-2018, 2018-2019, 2019-2020, 2020-2021 ஆகிய ஆண்டுகளில் தோச்சி பெற்ற அரசு
மற்றும் தனியார் ஐடிஐ
பயிற்சியாளா்கள், 8ம்
வகுப்பு தோச்சி மற்றும்
பத்தாம் வகுப்பு, பிளஸ்
2 வகுப்பு தோச்சி அல்லது
தோச்சியடையாத இளைஞா்கள்
(ஆண்,பெண் இருபாலரும்) அனைவரும் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியின் போது உதவித் தொகை
மாதம் ரூ. 7700 முதல்
ரூ. 10,000 வரை
நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழில்பழகுநா் சட்டம்
1961 – இன்படி, இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழில்
பழகுநா் பயிற்சி பெறுபவா்களுக்கு மத்திய அரசின் தேசிய
தொழில் பழகுநா் சான்றிதழ்
வழங்கப்படும்.
மேலும்
விவரங்களுக்கு 0461 2340041
என்ற தொலைபேசி எண்
அல்லது ரா.கனகராஜ்
(பயிற்சி அலுவலா்) 6383132166
மற்றும் க.விஜயகுமார் (உதவி பயிற்சி அலுவலா்)
9176698333
ஆகிய கைப்பேசி எண்களில்
தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here