டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தமிழக அளவில் இலவச மாதிரித் தேர்வு வரும் ஜூலை 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இணையவழியில் நடைபெறவுள்ளதாக ஆட்சித்தமிழ் IAS அகாடமி தெரிவித்துள்ளது.
இந்த மாதிரித் தேர்வில் பொதுத் தமிழ் பாடத்தில் 100 வினாக்கள், கணிதப் பாடத்தில் 25 வினாக்கள், பொது அறிவுப் பாடத்தில் 75 வினாக்கள் என TNPSCயின் புதிய வினா அமைப்பு முறையைப் பின்பற்றி வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரித் தேர்வானது வரும் ஜூலை 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இணையவழியில் இலவசமாக நடைபெற உள்ளது. தேர்வு முடிந்தவுடன் தேர்வு முடிவுகள் அரவிக்கப்படுவதோடு, மாநில அளவில் மாணவர்களின் தரவிசைப் பட்டியலும் வெளியிடப்படவுள்ளதால் தேர்வர்கள் தங்களின் தகுதியை அறிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இந்த மாதிரித் தேர்வு அமையும்.
மாதிரித் தேர்வில் பங்கேற்க விருப்புவோர் தங்களது முழு முகவரியுடன் TNPSC GROUP – IV MODEL EXAM என டைப் செய்து 98435 11188 என்ற எண்ணுக்கு ‘Whatsapp’ மூலம் அனுப்பி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு செய்த அனைவருக்கும் ஜூலை 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு முன்னாள் மாதிரித் தேர்வுக்கான ‘Link’ அனுப்பி வைக்கப்படும்.
இது குறித்து மேலும் தகவல் பெற ‘ஆட்சித் தமிழ் IAS அகாடமி, எண் 142, ஜிஎஸ்டி சாலை, குரோம் பேட்டை, சென்னை – 44’ என்ற முகரியில் நேரிலும், 98435 11188, 99439 55511, 99626 00043 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


