அக்னிபாத் அக்னிவீர் இலவச பயிற்சி முகாம்.
இராணுவத்தில் சேர்ந்து நற்கல்விச் சான்று, நல்ஒழுக்கம், நல்ல பயிற்சியுடன் ஊதியமும், மற்றும் ஊக்கத்தொகையும் இலவச ஆரோக்கிய உணவு, பாதுகாப்பான சுகாதாரமான இருப்பிடம் அளித்து நல்ல இளைஞர்களை நல்ல மனித சக்தியை நாட்டிற்கும், உலகிற்கும் வழிகாட்டும் சக்தியாக உருவாக்க முதல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
நாள்: கழுயுகாப்தம் 5124 தமிழ் சுபகிருது வருடம் ஆனி 31ம் தேதி (15.07.2022) வெள்ளிக்கிழமை சுபதினத்தில் காலை 9.45 மணிக்கு கோ பூஜையுடன் துவக்கம்.
அடிப்படை பயிற்சி நடைபெறும் நாட்கள்: ஜூலை 15, 16, 17 – 2022 (3 நாட்கள்)
ஆண் / பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்குமிட வசதி
இடம்: தேனி அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி,
செளராஸ்ட்ரா கல்வி வளாகம், வீரபாண்டி பை பாஸ் ரோடு, தேனி.
(தேனி – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் (தேனியிலுருந்து 10வது கி.மீ.) – 24 மணி நேர பேருந்து வசதியுடன் தமிழகத்தில் அனைத்துப் பகுதிலிருந்தும் வசதி உள்ளது)
பயிற்சியின்போது கொண்டு வரவேண்டிய பொருட்கள்:
- முகாம் கட்டணம் – 50 ரூபாய் மட்டும்.
- ஒரு குயர் நோட்டு – 2 பெரியது
- பேனா, பென்சில் – 2, ரப்பர்
- ஆதார் அட்டை (Xerox / Original)
- எண்ணெய், பேஸ்ட், பிரஷ், தட்டு, டம்ளர், போர்வை – 2, துண்டு – 2, அரைக்கால் டவுசர் – 3, டீ ஷர்ட் – 3, வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டை – 1 (கைலி அனுமதி இல்லை)
இராணுவ தகுதிகள்:
- 10.ம் வகுப்பு தேர்ச்சி
- வயது: 17.5 முதல் 23 வரை
- உயரம்: 155 செ.மீ.
- 1.6 கி.மீ ஓட்டம்: 5.30 நிமிடங்கள் (மதிப்பெண் 60)
- பீம் புல்லப்ஸ்: 10 (மதிப்பெண் 40)
- 9 அடி பள்ளம் தாண்டுதல்
- ஜிக் ஜாக் பீம் பேலன்ஸ்
கூடுதல் தகுதி:
- மெடிக்கல் பிட்னெஸ் சான்றிதழ்
- ஸ்போர்ட்ஸ் & கேம்ஸ் சான்றிதழ்
- NCC CERTIFICATE
Notice: Download Here
அக்னிவீர் பயிற்சி அட்டவணை
தொடர்புக்கு: பாரதீய பண்பாட்டு சேவா கேந்திரம்.
- 9366669995 (THENI S.C. BALAKRISHNAN)
- 8778573102 (P.C. DURAI)