சிறுபான்மையினர் கடன்
பெற விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் கலெக்டர் அறிக்கை:
டாம்கோ
என அழைக்கப்படும் தமிழ்நாடு
சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டு கழகம் சார்பில்,
தனி நபர் கடன்;
மகளிர் சுய உதவி
குழு; சிறு கடன்;
கைவினை கலைஞர்களுக்கு கடன்;
கல்வி கடன் ஆகிய
பல வித கடனுதவி
அளிக்கப்பட்டு வருகிறது.
கடனுதவி
பெறும் நபர் நகர்ப்
புறமாக இருந்தால், 1.20 லட்சம்
ரூபாய் ஆண்டு வருமானம்
இருக்க வேண்டும். கிராமப்புறமாக இருந்தால், 98 ஆயிரம் ரூபாய்
இருக்க வேண்டும்.ரூ.20
லட்சம்தனி நபர் கடனுக்கு,
ஒரு ஆண்டிற்கு 6 சதவீதம்
வட்டி வசூலிக்கப்படும். இதில்,
20 லட்சம் ரூபாய் வரையில்
கடன் பெறலாம். ஆண்களுக்கு 8 சதவீத வட்டி வசூலிக்கப்படும்.
இதில்,
30 லட்சம் ரூபாய் வரை
கடன் பெறலாம்.கைவினை
கலைஞர்களுக்கு, ஆண்களுக்கு 5 சதவீத வட்டி மற்றும்
பெண்களுக்கு 4 சதவீத வட்டி
ஒரு ஆண்டிற்கு வசூலிக்கப்படும்.
இதில்,
10 லட்சம் ரூபாய் வரையில்
கடனுதவி பெறலாம்.மகளிர்
சுய உதவி குழு
கடனுக்கு, ஒரு ஆண்டிற்கு
7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். ஒரு குழுவிற்குசுய உதவி
குழு 1 லட்சம் ரூபாய்
கடன் பெறலாம்.
சிறுபான்மை மாணவ – மாணவியர் அரசால்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிலையங்களில் இளங்கலை,
முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு, 3 சதவீத
வட்டி முதல், 8 சதவீத
வட்டி வரையில், 30 லட்சம்
ரூபாய் வரையில் கடனுதவி
வழங்கப்படும்.ஆதார்
அட்டைகாஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர், முஸ்லிம்,
சீக்கியர், புத்த மதத்தினர்,
பார்சி மற்றும் ஜெயின்
ஆகிய சிறுபான்மை இனத்தவர்
மதசான்று.
ஆதார்
அட்டை, வருமான சான்று,
ரேஷன் கார்டு அல்லது
இருப்பிடச் சான்று. கடன்
பெறும் தொழில் குறித்த
விபர திட்ட அறிக்கை,
ஓட்டுனர் உரிமம், கூட்டுறவு
வங்கி கோரும் இதர
ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்இதுதவிர, கல்வி
கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, பள்ளி
மாற்று சான்றிதழ், உண்மை
சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண்
சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல் சமர்ப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here