TAMIL
MIXER EDUCATION.ன் மயிலாடுதுறை செய்திகள்
கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுக்கான விழிப்புணா்வு
இதுகுறித்து, மயிலாடுதுறை ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இளைஞா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித்
தேர்வு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில்,
ஆண்டுதேர்றும் ஜூலை
2வது வாரம் தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணா்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
நிகழாண்டு
திறன் விழிப்புணா்வு வார
விழாவையொட்டி, ஜூலை
11 முதல் 15ம் தேதி
வரை 5 நாள்கள் முற்பகல்
11 மணி முதல் பல்வேறு
நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
ஜூலை 11ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மயிலாடுதுறையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்,
ஜூலை 12ல் மகளிருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
மயிலாடுதுறை அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
ஜூலை
13ம் தேதி 3ம்
பாலினத்தவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கூகுள் மீட்
இணையவழியாகவும், ஜூலை
14-ல் மயிலாடுதுறையில் மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் நடைபெறும்.
மேலும்,
தொழில்திறன் அறிந்திருக்கும் உரிய
சான்றுகள் இல்லாதேர்ரைக் கண்டறிந்து அவா்களுக்கு பயிற்சியளித்தல் தொடா்பான
வழிகாட்டுதல் நிகழ்ச்சி,
ஜூலை 15ம் தேதி
தேசிய திறன் நாளன்று
மயிலாடுதுறை மூவலூா் ஏழுமலையான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தன்னார்வ பயிலும்
வட்டம், அரசு போட்டித்
தேர்வுகள் மற்றும் அதற்கான
இலவச பயிற்சி வகுப்புகள், மெய்நிகா் கற்றல் இணையதளம்,
தனியார் வேலை நாடுநா்களுக்காக தொடங்கப்பட்டுள்ள தனியார்துறை வேலை வாய்ப்பு இணையம்,
திறன் பயிற்சிகள், சுயதொழில்
வாய்ப்புகள், கல்வி தொலைக்காட்சியின் பயன்கள் குறித்து
விளக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here