TAMIL
MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்
அரசு மற்றும்
சுயநிதி ஐ.டி.ஐ.,யில்
அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:
அரசு
தொழிற் பயிற்சி நிலையங்களில் 2022ம் ஆண்டில் சேரவும்,
அரசு உதவி பெறும்
தனியார் தொழிற் பயிற்சி
நிலையங்கள் மற்றும் சுயநிதி
தனியார் தொழிற் பயிற்சி
நிலையங்களில் அரசு
ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட
இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
www.skilltraining.tn.gov.in என்ற
இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு உதவிடும்
வகையில், மாநிலம் முழுதும்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட திறன் பயிற்சி
அலுவலகங்களில் சேர்க்கை
உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மையங்களின் பட்டியல் இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வித்தகுதி 8ம் வகுப்பு, பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்
50 ரூபாய். டெபிட், கிரெடிட்,
நெட் பாங்கிங், ஜி
பே வழியாக செலுத்தலாம்.
இணையதளம்
வழியாக வரும் 20ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மதிப்பெண் அடிப்படையில் நடக்கும்
இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை
பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விபரங்கள் கடைசி
தேதிக்குப்பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் சந்தேகம்
இருந்தால், govtvpmdtad@gmail.com இமெயில்
மூலமும், 04146 294989 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here