TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
MBA., MCA.,
படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
MBA.,
MCA., படிப்புகளுக்கு நாளை
முதல் விண்ணப்பிக்கலாம் என
தமிழக அரசு தெரவித்துள்ளது.
2022-2023ம்
கல்வியாண்டிற்கு இளங்கலை
பட்டப்படிப்பில் தேர்ச்சி
பெற்ற தகுதிவாய்ந்த மாணாக்கர்கள் அரசு, அரசு உதவி
பெறும் பொறியியற் கல்லூரி
மற்றும் கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம்,
வட்டார மையங்கள், அண்ணாமலை
பல்கலைக்கழகம், சென்னை
பல்கலைக் கழகம், இதர
பல்கலைக் கழகங்கள், சுயநிதி
பொறியியற் கல்லூரிகள் மற்றும்
கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளில் தொழில்
நுட்பக் கல்வி இயக்ககம்,
சென்னை – 600 025 மற்றும்
கல்லூரிக் கல்வி இயக்ககம்,
சென்னை 600 006 கட்டுப்பாட்டில் இயங்கும் MBA., MCA.,
முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. https://gct.ac.in/, www.tn-mbamca.com என்ற
இணையதளங்கள் வாயிலாக தேவையான
சான்றுகளுடன் இணையதளம்
மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் MBA., & MCA.,
முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு நாளை தொடங்கி
வரும் 5ம் தேதி
முடிவுறும். பதிவுக் கட்டணத்தை
விண்ணப்பதாரர் டெபிட்
கார்டு, கிரேடிட் கார்டு,
நெட் பேங்கிங் இணையதளம்
வாயிலாக மட்டுமே செலுத்தலாம். இந்த கல்வியாண்டில் MBA.,
MCA., முதுநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு நடைமுறைகளான விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி
தேர்ந்தெடுத்தல், தற்காலிக
மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை ஆகியவை அனைத்தும்
இணையதளம் வாயிலாக மட்டுமே
நடைபெறும்.
மேலும்
விவரங்கள் அறிய இணையதள
முகவரியில் பார்க்கவும். 0422 2451100
எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here