தற்காலிக ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜூலை 20க்குள் பணியில் சேர வேண்டுமென தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தற்காலிய ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கூறியதாவது:
தற்காலிய ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை விரைவுப் படுத்த வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
ஜூலை 15க்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு. தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து ஜூலை 18க்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் தர வேண்டும். இதில் தேர்வானவர்கள் ஜூலை 20க்குள் பணியில் சேர வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here