சிறுபான்மையினர் கடனுதவி
விண்ணப்பிக்க அழைப்பு
சிறுபான்மையினர் கடனுதவி பெற, கடன்
விண்ணப்பங்களை பூர்த்தி
செய்து, உரிய ஆவணங்களை
சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் வெளியிட்ட அறிக்கை:
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்
மூலம் பல்வேறு கடனுதவி
திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தனி
நபர் கடன் ஆண்டுக்கு,
6 சதவீதம் வட்டியில், அதிகபட்சம் கடனாக, 20 லட்சம் ரூபாய்
வழங்கப்படுகிறது. கைவினை
கலைஞர்களுக்கு, ஆண்களுக்கு, 5 சதவீதம், பெண்களுக்கு, 4 சதவீதம்
வட்டியில், அதிகபட்சம், 10 லட்சம்
ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.
சுய
உதவிக்குழு கடன், ஒரு
நபருக்கு, ஒரு லட்சம்
ரூபாய், ஆண்டுக்கு, 7 சதவீதம்
வட்டியில் வழங்கப்படுகிறது. கல்விக்கடன், 20 லட்சம் ரூபாய் வரை,
3 சதவீதம் வட்டியிலும், மாணவர்களுக்கு, 8 சதவீதம், மாணவியருக்கு, 5 சதவீதம்
வட்டியில், 30 லட்சம் ரூபாய்
வரை, வேறுதிட்டத்தில் கல்விக்கடனும் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய,
சீக்கிய, புத்த, பார்சி
மற்றும் ஜெயின் ஆகிய
சிறுபான்மையினர்கள், மேற்கண்ட
கடனுதவிகளை பெற, கடன்
விண்ணப்பங்களை பெற்று,
பூர்த்தி செய்து உரிய
ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here