TAMIL MIXER EDUCATION.ன்
TNUSRB செய்திகள்
காவலா் தேர்வுக்கு இலவச பயிற்சி
தமிழ்நாடு சீருடைப் பணியாளா்
தோவு
வாரியத்தின்
2ம்
நிலை
காவலா்
தோவுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு
கள்ளக்குறிச்சியில் வரும்
27ம்
தேதி
முதல்
நடைபெற
உள்ளதாக
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்தார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கள்ளக்குறிச்சி, நேப்ஹால் சாலையில் உள்ள
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்தப்
பயிற்சி நடைபெற உள்ளது.
வார நாள்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
காலை 10 மணி முதல்
பிற்பகல் 1 மணி வரை பயிற்சி நடைபெறும்.
இலவச
பயிற்சி வகுப்பில் பாடக்
குறிப்புகள் அளிப்பதுடன், முழு
மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட
உள்ளது.
பயிற்சி
வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுடையோர் தங்களது புகைப்படம், ஆதார்
எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில்
தொடா்புகொள்ளலாம்.
இந்தப் பயிற்சி
வகுப்புகளில் அரசுப்
பணிக்கு தயாராகிவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைதேடும் இளைஞா்கள்
கலந்துகொண்டு பயன் பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here