TAMIL MIXER EDUCATION.ன்
காவலா் தேர்வு பற்றிய
செய்திகள்
காவலா் தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வகுப்புகள்
இதுகுறித்து அரியலூர் ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய,
மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு, அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும்
தன்னார்வப் பயிலும் வட்டம்
வாயிலாக இலவச பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும்,
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும்
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறையால் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற
இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்,
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன.
தற்போது,
அறிவிக்கப்பட்டுள்ள ஐஆடந
தேர்வு மற்றும் தமிழ்நாடு
சீருடை பணியாளா் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார்
ஆய்வாளா், இரண்டாம் நிலை
காவலா் காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 27ம் தேதி
முதல் அரியலூா் மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில்
நடைபெற உள்ளது.
அரியலூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை
நேரில் தொடா்புகொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here