TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
இணையவழி தமிழ்க்
கற்றல் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்
இணையவழி
தமிழ்க்கற்றல் வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து தமிழ் அறக்கட்டளை – பெங்களூரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்
அறக்கட்டளை–பெங்களூரு சார்பில்
நடத்தப்பட்டு வரும்
ஒரு மாத காலத்திற்கான இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்பில்
சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழறிஞா் பொள்ளாச்சி நேசனால் வடிவமைக்கப்பட்ட கற்றல்
முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் 30 நாட்களில் அடிப்படை தமிழ்
கற்றுத் தரப்படுகிறது. தமிழ்
எழுதப் படிக்கத் தெரியாதவா்கள் பயிற்சியில் இணைய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தமிழ்க்
கற்றல் வகுப்புகள், ஆக.1
முதல் ஆக.30ம்
தேதிவரை நடக்கவிருக்கின்றன. ஜூம்
(குவியம்) வழியாக தினமும்
மாலை 6.30 மணி முதல்
இரவு 7.30 மணி வரை
வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்
வகுப்பில் அறநெறியைக் கற்பிக்கும் கதைகள், நாப்பி பயிற்சிக்காக பாடல்களும் கற்றுத் தரப்படுகின்றன. இந்தப் பயிற்சி இலவசமாக
வழங்கப்படுகிறது.
முதலில்
வருவோருக்கு முதலில் வாய்ப்பு
என்ற வகையில் 100 பேருக்கு
மட்டும் பயிற்சியில் சேர
வாய்ப்பளிக்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பங்களை கூகிள்ஃ பார்மில் ஜூலை
31ம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகும். கூடுதல்
விவரங்களுக்கு 9483755974,
9820281623 என்ற செல்லிடப்பேசி எண்கள்,
மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here