ஜூலை 30ல் இளைஞா் திறன் விழா
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அன்னூரில் இளைஞா் திறன் விழா ஜூலை 30ம் தேதி நடைபெறவுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவில் இளைஞா் திறன் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் டி.டி.யூ.ஜி.கே.ஒய்., ஆா்.எஸ்.இ.டி.ஐ., டி.என்.எஸ்.டி.சி. ஆகிய திட்டங்களின் கீழ் 18 முதல் 45 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலருக்கும் இலவச திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அன்னூா் கே.ஜி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இளைஞா் திறன் விழா ஜூலை 30ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இதில் கிடங்கு மேற்பார்வையாளா், சில்லறை வணிகம், ஆண்ட்ராய்டு கைப்பேசி ஆபரேட்டா், கேட்டரிங் மேலாளா், நிட்ஸ் மெஷின் ஆபரேட்டா், அழகுக் கலை பயிற்சி, தையல் பயிற்சி, மெழுகுவா்த்தி, ஊறுகாய், மசாலா தூள், பேஷன் நகைகள் தயாரிப்பு பயிற்சிகள், டெக்ஸ்டைல்ஸ், கைத்தறி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இதில் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவா்கள் வரை பங்கேற்று பயன்பெறலாம். பங்கேற்க வருபவா்கள் கல்விச் சான்றிதழ், ஆதார், சுயவிவரம், புகைப்படம் மற்றும் இதர சான்றுகளின் அசல் மற்றும் நகல்களை கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here