வங்கி செய்திகள்
பிறப்பு, இறப்பு
சான்றிதழை ஆன்லைன் மூலமாக
பதிவிறக்கம் செய்வது எப்படி?
பொதுமக்கள் பிறப்பு, இறப்பு தேதி
குறித்தான அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவிட்டு
சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
எந்தவித செலவும் இல்லாமல்
எப்படி ஆன்லைன் வழியாக
பிறப்பு மற்றும் இறப்பு
சான்றிதழை பதிவிறக்கம் செய்வது
என்பதை பார்க்கலாம்.
அதாவது
பிறப்பு மற்றும் இறப்பு
சான்றிதழ்களை ஆன்லைன்
வழியாக பதிவிறக்கம் செய்வதில்
இரண்டு வகையான வழிமுறைகள் இருக்கின்றன.
அதாவது,
சென்னையை இருப்பிடமாக கொண்டவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/
என்கிற இணையதள முகவரியின் மூலமாக சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
பிற பகுதிகளில் வசிப்பவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx
என்கிற இணையதள முகவரியின் மூலமாக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில்
இந்த இணையதள முகவரி
பக்கத்திற்கு சென்று
பிறப்பு சான்றிதழ் தேடுதல்(Search)
என்கிற பகுதியை கிளிக்
செய்து பிறந்த மாவட்டம்,
பேரூராட்சி, பாலினம், பிறந்த
தேதி முதலான அனைத்து
விவரங்களையும் பதிவு
செய்ய வேண்டும். பின்னர்,
சான்றிதழ் எந்த மொழியில்
வேண்டும் என்பதை கிளிக்
செய்து Generate என்பதை
கிளிக் செய்துவிட்டால் சான்றிதழை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here