TAMIL MIXER EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை
– மதுரை
வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கும் காலாண்டிற்கு ஒருமுறை உதவித்தொகை வழங்குவதில் இருந்து விலக்களித்து, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுமென மதுரை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம்
சார்பில் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கான உதவித்தொகை காலாண்டிற்கு ஒருமுறை
வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது
அனைத்துவகை வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி பயனாளிகள் உதவித்தொகை மாதந்தோறும் பயன்பெறும் வகையில், காலாண்டிற்கு ஒருமுறை உதவித்தொகை வழங்குவதில் இருந்து விலக்களித்து, சிறப்பு
நேர்வாக 2021-2022ம்
நிதியாண்டு முதல் தொடர்ந்து
மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவதற்கு அரசால் அனுமதி வழங்கி
ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில உதவித்தொகை பெறும்
வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கும் காலாண்டிற்கு ஒரு
முறை உதவித்தொகை வழங்குவதில் இருந்து விலக்களித்து, தொடர்ந்து
மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here