TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
தட்டச்சுத் தேர்வில்
பழைய நடைமுறையையே பின்பற்ற உத்தரவு
தட்டச்சுத் தேர்வில் பழைய நடைமுறையையே பின்பற்றுமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு சென்னை
உயா்நீதிமன்ற மதுரைக்
கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தட்டச்சு – சுருக்கெழுத்து கணினி பயிற்சி மையங்களின் சங்கத் தலைவா் தாக்கல் செய்த மனு:
தமிழக
அரசின் தொழில்நுட்பக் கல்வி
இயக்ககம் சார்பில், இளநிலை,
மேல்நிலை என இரு
நிலைகளில் ஆண்டுதேர்றும் தட்டச்சு
தேர்வு நடத்தப்படுகிறது.
இரு
தேர்வுகளும் தலா இரு
தாள்களைக் கொண்டது.
இளநிலைத்
தட்டச்சுத் தேர்வின் தாள்
1, குறிப்பிட்ட நேரத்தில் தட்டச்சு
செய்வதை பரிசோதிக்கும் SPEED TEST ஆகும்.
தாள் 2ல் அறிக்கை
மற்றும் கடிதத்தை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தட்டச்சு
செய்வதாகும். கடந்த 75 ஆண்டுகளாக
இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. நிகழ் ஆண்டு
தேர்வுக்கும் இதன்படியே,
மாணவா்கள் தயாராகினா்.
இதனிடையே,
கடந்த மார்ச் மாதம்
நடந்த தேர்வுக்கான அறிவிப்பில், தாள் 1 மற்றும் தாள்
2 நடைமுறை அப்படியே தலைகீழாக
மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து பழைய நடைமுறையிலேயே தேர்வு
நடத்தக் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், எங்களது கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிடப்பட்டது. இருப்பினும், அறிவிப்பின்படியே தேர்வு
நடத்தப்பட்டது.
அதோடு,
வரும் செப்டம்பரில் நடைபெறும்
தேர்வையும் அதே நடைமுறையில் நடத்துவதற்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டது. ஆகவே,
பழைய நடைமுறையிலேயே தட்டச்சு
தேர்வை நடத்த உத்தரவிட
வேண்டும் என மனுவில்
குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
இந்த
வழக்கில் நீதிமன்றத்தின் முந்தைய
உத்தரவு, தொழில்நுட்பக் கல்வி
இயக்ககம் முறையாகப் பின்பற்றவில்லை. ஆகவே, புதிய நடைமுறையில் தேர்வு நடத்தும் முடிவு
ரத்து செய்யப்படுகிறது. ஏற்கெனவே
உள்ள நடைமுறைப்படி தட்டச்சு
தேர்வை நடத்த வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here