TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
மானியத்துடன் சூரிய
சக்தி பம்பு செட்
அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கூறியது:
தமிழக
அரசு வேளாண்மைப் பொறியியல்
துறையின் மூலம் முதல்வரின் சூரிய சக்தி பம்பு
செட்டுகள் திட்டத்தின் கீழ்
மின் இணைப்பு இல்லாத
பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரைத் திறன் வரையிலான
மின் கட்டமைப்புடன் சாராத
தனித்து சூரிய சக்தியால்
இயங்கும் பம்பு செட்டுகள்
70 சதவிகித மானியத்தில் அமைக்கும்
திட்டம் 2021-2022ம்
ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு
மின் உற்பத்தி மற்றும்
பகிர்மானக் கழகத்தின் மூலம்
இலவச மின் இணைப்பு
கோரி ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் மூப்பு
முன்னுரிமையை இழக்க
மாட்டார்கள். இத்திட்டத்தின் கீழ்
ஆதி திராவிட மற்றும்
பழங்குடியின பிரிவினைச் சார்ந்த
சிறு மற்றும் குறு
விவசாயிகளுக்கு கூடுதலாக
20% மானியம் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயக்
குழுக்கள் அருகிலுள்ள உபகோட்ட
உதவி செயற்பொறியாளா், வேளாண்மை
பொறியியல் துறை புதுக்கோட்டை – 99944 05285 மற்றும்
அறந்தாங்கி ராஜேந்திரபுரம் –
91593 84364,
செயற்பொறியாளா், வேளாண்மை
பொறியியல் துறை, புதுக்கோட்டை– 04322 221816 ஆகியவற்றில் விவரங்களை
அறியலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow