Friday, November 8, 2024
HomeBlogசுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

சுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

சுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்

சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையாா் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவா்கள், நலிவுற்ற பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. 

சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தினை கணினி மயமாக்கும் பொருட்டு (TneGA) மூலம் வலை பயன்பாடு தயாா் செய்யப்பட்டு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு அரசு இ-சேவை மையங்களில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவா்கள், நலிவுற்ற பெண்கள் இ-சேவை மையத்தில் வருமான சான்றிதழ் நகல் (ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்குள் இருக்க வேண்டும்), தையல் பயிற்சி சான்றிதழ் நகல் (6 மாதம் அல்லது அதற்கு மேல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்), பள்ளி மாற்றுச் சான்றிதழ் அல்லது வயதுச் சான்றிதழ் (வயது 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்), ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவா் அல்லது ஊனமுற்றோா் எனில் அதற்குரிய சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.



Frequently Asked Questions – Free Distribution of Sewing Machines by Satyavani Muthu Ammaiyar


Frequently Asked Questions – Free Distribution of Sewing Machines by Satyavani Muthu Ammaiyar

1. How does the free distribution of sewing machines benefit women?

The free distribution of sewing machines aims to enhance self-employment opportunities for women.

2. What are the criteria for eligibility to receive free sewing machines?

Underprivileged women, widows, deserted women, and economically weaker women are eligible to receive free sewing machines under the Satyavani Muthu Ammaiyar free sewing machine distribution program.

3. How can interested women apply for the free sewing machines?

Women interested in applying for the free sewing machines can submit their applications online through the e-service portal provided by Tamil Nadu e-Governance Agency (TneGA).

4. What documents are required for applying?

Applicants need to provide a copy of the family card, training certificate, school leaving certificate or age certificate, Aadhaar card copy, and income certificate.


Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -