நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவலா் பணிக்கான போட்டித் தோ்வு மற்றும் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ள இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறை காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான தோ்வுக்கும், ஆசிரியா் தகுதித் தோ்வுக்கும் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் அலுவலக வேலை நடத்தப்படுகிறது.
காவலா் தோ்வுக்கு வியாழக்கிழமை (ஆக.31) முதல் தினமும் பிற்பகல் 3 முதல் மாலை 5 மணி வரையும், ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு செப். 1-ஆம் தேதி முதல் பிரதிவாரம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
எனவே, காவலா் பணிக்கான போட்டித் தோ்வு மற்றும் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள நாகை மாவட்டத்தைச் சோந்தவா்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
Frequently Asked Questions – Employment and Training Opportunities in Nagai District
1. What are the training opportunities offered by the Nagai District administration?
The Nagai District administration provides free training programs for employment and skill development in the fields of police constable, grade II constable, fireman positions, and teaching proficiency.
2. When and where are the training programs conducted?
The police constable, grade II constable, and fireman training programs are held from Monday to Saturday, 3:00 PM to 5:00 PM. The teaching proficiency training is conducted on Saturdays and Sundays, 10:00 AM to 5:00 PM.
3. How can interested individuals apply for the training programs?
Interested candidates can apply for the training programs through the official website of the Nagai District administration by the specified deadline.