TAMIL MIXER EDUCATION.ன்
இன்ஜினியரிங் கவுன்சிலிங் செய்திகள்
நிர்வாக பிரச்னைகளால், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி தள்ளிவைப்பு
நிர்வாக
பிரச்னைகளால், தமிழக
இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
வெளியாக
வேண்டிய தரவரிசை பட்டியலும் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில்
உள்ள, 430க்கும் மேற்பட்ட
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
+2
முடித்த மாணவர்கள், B.E.,
B.Tech., படிப்பில், முதலாம் ஆண்டில்
சேர விண்ணப்பித்உள்ளனர்.இந்த
ஆண்டு, 2.11 லட்சம் பேர்
‘ஆன்லைனில்‘ பதிவு செய்தனர்.
அவர்களில், 1.69 லட்சம் பேர்
மட்டுமே, விண்ணப்ப கட்டணம்
செலுத்தினர். இவர்களின் மதிப்பெண்
அடிப்படையில், மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் 08.08.2022 வெளியிடுவதாக இருந்தது.
ஆனால்,
தரவரிசை பட்டியல் வெளியிடவில்லை. வரும், 16ம் தேதி
வெளியிடப்படும் என
கூறப்பட்டுள்ளது.அதேபோல்,
சிறப்பு பிரிவுக்கான கவுன்சிலிங் 16ம் தேதிக்கு பதில்,
20ம் தேதி; பொது
பிரிவுக்கு 22ம் தேதிக்கு
பதில், 25ம் தேதி
தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
துணை கவுன்சிலிங்குக்கு அக்.,
15க்கு பதில், 22ம்
தேதி துவங்கும் என்றும்
அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில்,
இந்த
ஆண்டு புதிய நடைமுறைகளை அமல்படுத்த, உயர் கல்வி
துறை முயற்சித்து வருகிறது.
இதனால் ஏற்பட்டுள்ள நிர்வாக
மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களால், கவுன்சிலிங் தேதி தள்ளி
வைக்கப்பட்டுள்ளது.
வெளியிட்ட
கால அட்டவணையும், தற்காலிகமானது என, உயர் கல்வித்
துறை தெரிவித்து உள்ளது.
கவுன்சிலிங் தள்ளிவைப்பு குறித்து, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில்:
மருத்துவ
படிப்புக்கான நீட்
நுழைவுத் தேர்வு முடிவுக்காக, இன்ஜினியரிங் கவுன்சிலிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow