TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC
குரூப் 1 தேர்வுக்கு இலவச
பயிற்சி
– திருவாரூா்
இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் TNPSC
குரூப்-1 தேர்வு மூலம்
துணை ஆட்சியா், துணை
காவல் கண்காணிப்பாளா், உதவி
ஆணையா் (வணிக வரித்துறை),
கூட்டுறவு சங்கங்களின் துணைப்
பதிவாளா், உதவி இயக்குநா்
(ஊரக வளா்ச்சித் துறை),
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்
உள்ளிட்ட பதவிகளில் 92 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான பட்டயப்படிப்பு அல்லது
இணைக் கல்வித் தகுதியுடன் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப
கடைசி நாள் ஆக.22.
இதற்கான முதல்நிலைத் தேர்வு
அக்.30ம் தேதி
நடைபெற உள்ளது.
இந்தத்
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் பயனடையும்
வகையில் திருவாரூா் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தன்னார்வ
பயிலும் வட்டம் மூலம்
செப்.2ம்(02.09.2022) தேதி முதல்
இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதில்
பங்கேற்பவா்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை,
தேர்வுக்கு விண்ணப்பம் செய்த
நகல், குடும்ப அட்டை
மற்றும் ஆதார் அட்டையின்
நகல் ஆகியவற்றுடன் திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow