TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
விழுப்புரத்தில் TNPSC
குரூப் 1 தேர்வுக்கான இலவசப்
பயிற்சி
தமிழக
அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
விழுப்புரத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) தொடங்குகிறது.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்பட்டு வரும் தன்னார்வ
பயிலும் வட்டத்தில் பல்வேறு
போட்டித் தேர்வுகளுக்கு இலவசப்
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கு
தமிழக அரசுப் பணியாளா்
தேர்வாணையத்தின் குரூப்
1 முதல்நிலை தேர்வுக்கான இலவசப்
பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில்
தொடங்கப்படவுள்ளது. இந்தப்
பயிற்சி வகுப்பானது திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
வார நாள்களில் காலை
10.30 முதல் பிற்பகல் 1.30 வரை
நடைபெறும்.
இந்தப்
பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடைய விரும்புபவா்கள் திங்கள்கிழமை காலைக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி
பதிவு செய்துகொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow