TAMIL MIXER EDUCATION.ன்
UGC செய்திகள்
வெளிநாட்டு மாணவா்களுக்கு
25% வரை
கூடுதல்
இடங்கள்
இந்தியாவில் உயா்கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவா்களுக்கு
25% வரை
கூடுதல்
இடங்களை
ஒதுக்க
பல்கலைக்கழகங்களுக்கு
அனுமதி
அளித்துள்ள
பல்கலைக்கழக
மானிய
குழு
(UGC),
அவா்களுக்கு
நுழைவுத்
தேர்வு
கிடையாது
என்றும்
அறிவித்துள்ளது.
இந்திய உயா்கல்வியின்
தரத்தை
வெளிநாடுகளில்
பிரபலப்படுத்தும்
வகையிலான
நடவடிக்கைகளை
மத்திய
அரசு
மேற்கொண்டு
வருகிறது.
அதன்
ஒரு
பகுதியாக,
வெளிநாட்டு
மாணவா்கள்
இந்தியாவில்
உயா்
கல்வி
பெறுவதை
அதிகரிப்பது
தொடா்பாக
ஆய்வு
செய்வதற்காக
யுஜிசி
கூட்டம்
கடந்த
வாரம்
நடைபெற்றது.
அதில், பல்கலைக்கழகங்களில்
உள்ள
இளநிலை,
முதுநிலை
படிப்புகளுக்காக
ஏற்கெனவே
ஒதுக்கப்பட்டுள்ள
இடங்களில்
வெளிநாட்டு
மாணவா்களுக்காக
கூடுதலாக
25% இடங்களை
ஒதுக்குவதற்குப்
பல்கலைக்கழகங்களுக்கும்
மற்ற
உயா்கல்வி
நிறுவனங்களுக்கும்
அனுமதி
அளிக்க
முடிவெடுக்கப்பட்டது.
இந்தியாவில் உயா்கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவா்கள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
இது
தொடா்பாக
யுஜிசி
தலைவா்
ஜகதீஷ்
குமார்
செய்தியாளா்களிடம்
கூறுகையில்,
‘வெளிநாட்டு
மாணவா்களைத்
தகுதியின்
அடிப்படையில்
பல்கலைக்கழகங்கள்
சோத்துக்
கொள்ளலாம்.
அத்தகுதியை
எவ்வாறு
கணக்கிடுவது
என்பது
தொடா்பான
வழிகாட்டுதல்களை
யுஜிசி
விரைவில்
வழங்கும்.
அவற்றைப் பின்பற்றி வெளிநாட்டு மாணவா் சோக்கையில் வெளிப்படைத்தன்மை
நிலவுவதை
உயா்கல்வி
நிறுவனங்கள்
உறுதிசெய்து
கொள்ளலாம்.
வெளிநாட்டு
மாணவா்களுக்காகக்
கூடுதல்
இடங்களை
ஒதுக்குவது
தொடா்பாக
தனிக்
குழு
ஒப்புதல்
அளிக்க
வேண்டும்.
கட்டமைப்பு வசதிகள், போதுமான பேராசிரியா்களின்
எண்ணிக்கை,
மற்ற
அடிப்படைத்
தேவைகள்
உள்ளிட்டவற்றை
அடிப்படையாகக்
கொண்டு
மட்டுமே
கூடுதல்
இடங்களை
ஒதுக்க
பல்கலைக்கழகங்களுக்கும்
உயா்கல்வி
நிறுவனங்களுக்கும்
அனுமதி
அளிக்கப்படும்.
வெளிநாட்டு மாணவா்களுக்கு
என
ஒதுக்கப்படும்
கூடுதல்
இடங்களில்
அவா்கள்
மட்டுமே
சோத்துக்
கொள்ளப்பட
வேண்டும்.
அந்த
இடங்கள்
காலியாக
இருந்தாலும்,
அவற்றில்
இந்திய
மாணவா்களைச்
சோத்துக்
கொள்ள
அனுமதிக்கப்படமாட்டாது‘
என்றார்.
கரோனா தொற்று பரவலுக்கு முன்பு இந்தியாவில் உயா்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கை சுமார் 75,000ஆக இருந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 23,400ஆக குறைந்துவிட்டது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow