தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளரை தொடா்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள், விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டமானது கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தட்கல் முறையில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
ஏற்கெனவே விவசாய மின் இணைப்புக் கேட்டு பதிவு செய்துள்ள விருப்பமுள்ள சேலம் மாவட்ட விவசாயிகள், தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளரைத் தொடா்பு கொள்ளலாம் என்று மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் ந.தெண்டபாணி தெரிவித்துள்ளாா்.