TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்
அரசு ஒதுக்கீட்டில் ITI சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:
அரசு
தொழிற் பயிற்சி நிலையம்,
அரசு உதவி பெறும்
மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங் களின் அரசு
ஒதுக்கீட்டு இடங்களில் 2022ம்
ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட
இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
www.skilltraining.tn.gov.in என்ற
இணையதளம் வாயிலாக பத்தாம்
வகுப்பு, 8ம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்,
தொழிற் பயிற்சி நிலையத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் 18.8.2022 முதல்
25.8.2022 முடிய விண்ணப்பங்கள் பதிவு
செய்யலாம்.
மதிப்பெண்
அடிப்படையில் நடைபெறும்
இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப்
பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விபரங்கள் கடைசி
தேதிக்குப் பிறகு இதே
இணையதளத்தில் வெளியிடப்படும்.விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையம்
மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு
ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேலும்
அரசு மற்றும் தனியார்
தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவு
விபரங்கள் அறிய www.skilltraining.tn.gov.in என்ற
இணையதளத்தினை பார்க்கலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும்போது தங்களது
அசல் ஆவணங்களான மாற்றுச்
சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்,
ஜாதிச் சான்றிதழ் மற்றும்
முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ்
ஆகியவை பதிவேற்றம் செய்ய
வேண்டும்.தொழிற் பயிற்சி
நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் 750 ரூபாய் உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப் புத்தகம்,
மூடு காலணி, சீருடை,
வரைபடக் கருவி கள்,
இலவச பஸ் பாஸ்
ஆகி யவை வழங்கப்படுகிறது.
மேலும்,
பயிற்சியின்போது பிரபல
தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில்
நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow