தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மத்தியஅரசு குடிமைப் பணி தேர்வுகளுக்கு தயாராகும் 1000 மாணவர்கள் மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு முதல்நிலை தேர்வுக்குதயாராவதற்கு அவர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் பத்து மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து செப்.10 ல் மதிப்பீட்டு தேர்வு நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம், என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.