ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஆசிரியர் தகுதிக்கு தேர்வுக்கு செப்.2 முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுகளான தாள் – 1, 2 தேர்வுகளை எழுத உள்ள கல்வியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் போன்ற பாடத்திட்டங்கள் உள்ளன.
இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப்.2 முதல் துவங்க உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுய விபரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு நேரில் அல்லது 04567 – 230160 என்ற தொலைபசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் தெரிவித்துள்ளார்.