TAMIL MIXER EDUCATION.ன்
திறனறி தேர்வு செய்திகள்
அறிவியல் விழிப்புணர்வு திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய
அரசு நடத்தும் அறிவியல்
விழிப்புணர்வு திறனறி
தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் செப்.,30ம்
தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய
அரசின் அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப துறையின் கீழ்
இயங்கும் விஞ்ஞான் பிரச்சார்
நிறுவனம், விபா நிறுவனம்
மற்றும் தேசிய கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம்
இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல்
விழிப்புணர்வு தேர்வை,
ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இணையவழியில் நடக்கும் இத்தேர்வில், பள்ளி
மாணவர்கள் மட்டுமல்லாமல், தனித்தேர்வர்களும் பங்கேற்கலாம். ஆங்கிலம்
மட்டுமல்லாமல், தமிழ்,
தெலுங்கு, மராத்தி ஆகிய,
பிராந்திய மொழிகளிலும் நடக்கும்
இத்தேர்வு, நவ.,27 மற்றும்
30 ஆகிய இரு நாட்கள்
நடக்கிறது.ஆறு முதல்
பிளஸ் 1 வரையிலான, மாணவர்கள்
பங்கேற்கலாம். மாவட்ட,
மாநில, தேசிய அளவில்,
அதிக மதிப்பெண் பெற்ற
மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப்பரிசு, சான்றிதழ்
வழங்கப்படுகிறது.வரும்
செப்.,30ம் (30.09.2022)
தேதி விண்ணப்பிக்க கடைசி
நாள்.
www.vvm.org.in என்ற இணையதளம்
மூலமாக விண்ணப்பிக்கலாம். கூடுதல்
தகவலுக்கு, வித்யார்த்தி விஞ்ஞான்
மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை, 87782 01926
என்ற எண்ணிலோ, அல்லது
vvmtamilnadu@gmail.com என்ற,
இ–மெயில் முகவரியிலோ, தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow