Monday, December 23, 2024
HomeBlogதவறுதலாக வேறொருவர் கணக்குக்கு பணம் அனுப்பிவிட்டால் திரும்பப் பெறுவது எப்படி?
- Advertisment -

தவறுதலாக வேறொருவர் கணக்குக்கு பணம் அனுப்பிவிட்டால் திரும்பப் பெறுவது எப்படி?

How to get a refund if you have mistakenly sent money to someone else's account

தவறுதலாக வேறொருவர்
கணக்குக்கு பணம் அனுப்பிவிட்டால் திரும்பப் பெறுவது எப்படி?

ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு கேரளா ஆகிய மாநிலங்களுக்கான தென்மண்டல மேலாளராக இருக்கும் மணியன் கலியமூர்த்தி பேசியதாவது:

பொதுவாக,
இந்த மாதிரியான விஷயங்களுக்கு வங்கி பொறுப்பெடுத்துக் கொள்ளாது.
தவறுதலாக பணம் அனுப்பிய
கணக்கின் உரிமையாளருடைய பொறுப்புதான் அது. ஆனால், அதை
மீண்டும் பெறுவதற்குத் தேவையான
உதவிகளை வங்கி சார்பாக
செய்வார்கள்.

வங்கிக்கு
நேரடியாகச் சென்று பணம்
அனுப்பும்போது, பணம்
அனுப்புவதற்காக நாம்
கொடுக்கும் கணக்கு விவரங்கள்,
பெயர் ஆகியவற்றைச் சரிபார்ப்பார்கள். ஒருவேளை அந்தக்
கணக்கு எண்ணில் ஏதேனும்
ஒன்று அல்லது இரண்டு
எண்கள் பிழையாகியிருந்தால், கணக்கு
உரிமையாளரின் பெயர்
விவரம் வேறு ஒருவருடையதாகக் காட்டும்.

அப்போது
பணம் அனுப்புபவர் கொடுத்த
பெயரோடு அது முரண்படுவதைப் பார்த்து, உடனடியாக வங்கி
தரப்பில் அந்தச் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, பணம் அனுப்புபவரிடம் விசாரிப்பார்கள்.

ஆனால்,
இணையவழியில் வங்கியின் அதிகாரபூர்வ செயலி, இணையதள நெட்
பேங்கிங், யுபிஐ செயலி
என்று எதன் மூலம்
அனுப்பினாலும், இதை
வங்கியால் செய்யமுடியாது. இவற்றில்
பணம் அனுப்புபவரே வங்கிக்
கணக்கு விவரங்களை உள்ளிடுகிறார், அதைச் சரிபார்க்கிறார், அவரே
பணத்தை அனுப்புகிறார்.

அப்படி
பணம் அனுப்பும்போது, அவர்
தவறுதலாக வேறு கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால், அதற்கான
பொறுப்பு முற்றிலும் அவருடையது
தான். ஆனால், அந்தப்
பணத்தை மீண்டும் பெறுவதற்குத் தேவையான உதவிகளை அவருடைய
வங்கி செய்யும்.

வங்கி தரப்பில் என்ன செய்வார்கள்?

முதலில்,
ஒருவருடைய வங்கிக் கணக்கு
விவரங்களை பணம் அனுப்புவதற்காக நம்முடைய செயலியிலோ இணையதளம்
மூலமோ பதிவு செய்யும்போது மீண்டும் சரிபார்க்குமாறு கேட்கப்படும். அதில் நாம் ஒருமுறைக்கு இருமுறை நாம் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
அதற்குப் பிறகும்கூட, பல
வங்கிகளில், நம்மால் உடனடியாகப் பணம் அனுப்ப முடியாது,
30
நிமிடங்கள் கழித்து தான்
அனுப்ப முடியும். அந்த
30
நிமிடங்கள் முடிந்த பிறகு,
நாம் பணம் அனுப்பலாம் என்று நமக்கு குறுஞ்செய்தி வரும்.

அதற்குப்
பிறகு நாம் பணத்தை
அனுப்புகிறோம். ஆனால்,
பணம் செல்ல வேண்டிய
நபருக்குக் கிடைக்கவில்லை. பிறகு,
மீண்டும் பணப் பரிமாற்ற
விவரங்களைச் சரிபார்க்கையில் தான்
ஒரு எண் தவறாகிவிட்டதை உணர்கிறோம். இங்கு, ஒருவேளை
தவறுதலாக உள்ளீடு செய்த
கணக்கு விவரம் உண்மையில்
இல்லாமல் இருந்தால், தானாகவே
பரிமாற்றம் தவிர்க்கப்பட்டு நமக்கு
அதற்கான தகவலும் வந்துவிடும்.

ஆனால்,
ஒருவேளை நாம் தவறுதலாக
உள்ளிடும் கணக்கு விவரம்
வேறொருவருடைய கணக்காக
இருந்தால், பணம் அவருக்குச் சென்றுவிடும். இந்த
நேரத்தில், வங்கிக்குச் சென்று
கேட்டால், எந்தக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டதோ, அந்தக்
கணக்கு இருக்கும் வங்கி
மற்றும் கிளையின் விவரங்களை
நம்முடைய வங்கி அதிகாரிகள் கொடுப்பார்கள். இதைப்
பெறுவதற்கு, நாம் பணம்
தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டது என்பதற்கான பணப் பரிவர்த்தனை ஆதாரங்களைக் கொடுத்து, எழுத்துபூர்வமாகக் கேட்க
வேண்டும்.

பிறகு,
அவர்கள் கொடுத்த வங்கிக்
கிளைக்குச் சென்று அதே
முறையைப் பின்பற்றி எழுத்துபூர்வமாக ஆதாரத்தைச் சமர்ப்பித்து பணத்தைத்
திரும்பப் பெற்றுத் தருமாறு
கேட்கவேண்டும். அவர்கள்,
தவறுதலாக பணம் எந்தக்
கணக்குக்கு அனுப்பப்பட்டதோ, அந்தக்
கணக்கின் நிலை என்ன,
அனுப்பப்பட்ட பணத்தை
அவர் அப்படியே வைத்துள்ளாரா அல்லது எடுத்துவிட்டாரா என்பன
போன்ற தகவல்களைச் சரிபார்ப்பார்கள்.

ஒருவேளை
அனுப்பப்பட்ட பணம்
அப்படியே இருந்தால், வங்கி
தரப்பிலிருந்து அந்தக்
கணக்கின் உரிமையாளரைத் தொடர்புகொண்டு, தவறுதலாக பணப் பரிமாற்றம் நடந்ததை விவரமாகக் கூறி,
அந்தப் பணத்தை எடுத்து
வங்கியில் கொடுத்துவிடுமாறோ அல்லது
குறித்த கணக்கிற்கே மீண்டும்
அனுப்பிவிடுமாறோ கோருவார்கள்.

இதன்மூலம்
அவர் பணத்தைத் திருப்பி
அனுப்பிவிட்டால், பிரச்னை
சுமூகமாக முடிந்துவிடும். ஆனால்,
நிலைமை அப்படியில்லாமல் அவர்
அந்தப் பணத்தை எடுத்துச்
செலவழித்திருந்தால், அவராக
விருப்பப்பட்டு கொடுத்தால் ஒழிய பணத்தைப் பெற
முடியாது.

தவறுதலாகப் போன பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லையெனில் என்ன செய்வது?

இதை
எனக்கு வர வேண்டிய
பணம் என்று நினைத்து
நான் செலவழித்துவிட்டேன். என்
கையில் பணம் இருக்கும்போது கொடுக்கிறேன், என்று
கூறினால் அதற்கு மேல்
ஒன்றும் செய்யமுடியாது. இதை
நெறிப்படுத்துவதற்கெனத் தனி
சட்ட விதிமுறைகள் ஏதுமில்லை.

அவர்
மீது போலீஸில் புகார்
செய்து, அந்தப் புகாரின்
நகலை வங்கியில் கொடுத்து
அவருடைய வங்கிக் கணக்கை
ஃப்ரீஸ் செய்யலாம். அப்படிச்
செய்யும்போது, பணம்
போடுவது, எடுப்பது என்று
அவர் அந்தக் கணக்கைத்
தொடர்ந்து பயன்படுத்துபவராக இருந்தால்,
மீண்டும் கணக்கை பழைய
நிலைமைக்குத் திரும்பப்
பெறுவதற்காக பணத்தைத் திரும்பச்
செலுத்த ஒப்புக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. அவருக்கு தவறுதலாகக் கிடைத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரை, கணக்கை
ஃப்ரீஸ் செய்து வைக்க
முடியும்.

ஆனால்,
ஒருவேளை தன் கணக்கிலேயே பணம் எதுவுமில்லாமல் இருந்து,
இந்தப் பணத்தையும் அவர்
எடுத்துக் கொண்டிருந்தால், கணக்கு
ஃப்ரீஸ் செய்யப்பட்டதைப் பற்றிப்
பொருட்படுத்தாமல் வேறு
வங்கிக் கணக்கை தொடங்கிக்
கொண்டு, தனது அன்றாட
வாழ்க்கைக்குள் சென்றுவிடலாம்.

போலீஸ்
உட்பட பணத்தைத் திரும்பிக் கொடுக்குமாறு அவரிடம்
கேட்கத்தான் முடியுமே தவிர,
இதில் ஒருவர் மீது
நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு
இந்தியாவில் அதுகுறித்த சட்டம்
எதுவுமில்லை. ஆகவே, அவராகப்
பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் வரை காத்திருந்துதான் ஆக
வேண்டும்.

உதாரணமாக,
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி
ஒருவருக்கு உள்ளூர் வங்கியில்
ஜன் தன் கணக்கு
இருந்தது. அதில் திடீரென
அவருக்கு 15 லட்சம் ரூபாய்
கிடைக்கவே, பிரதமர் தனது
தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப்
போல் பணத்தை போட்டுவிட்டார் என்று நம்பி அதில்
9
லட்சத்தை எடுத்து வீடு
கட்டிவிட்டார்.

கூடவே,
வங்கிக் கணக்கில் 15 லட்சம்
ரூபாய் செலுத்தியதற்காக பிரதமர்
மோதிக்கு நன்றிக் கடிதமும்
எழுதினார்.

ஆனால்,
6
மாதங்கள் கழித்து வங்கியிலிருந்து, “உங்கள் வங்கிக்
கணக்கில் தவறுதலாக 15 லட்சம்
ரூபாய் போடப்பட்டுவிட்டது. அதை
உடனே திருப்பிச் செலுத்துங்கள்என்று கடிதம்
வந்துள்ளது.

பிம்பல்வாடி கிராம மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி, தவறுதலாக இவருடைய
வங்கிக் கணக்குக்கு போடப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில்
விளக்கம் கொடுத்தனர். அதை
கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் கணக்கில் செலுத்துவதற்கு பதிலாக
இவருடைய கணக்கில் செலுத்தியுள்ளனர்.

இந்த
விஷயத்தில் அந்த விவசாயி
மீது எந்தத் தவறும்
இல்லை. பணத்தை தவறாகப்
போட்டது அவர்களுடைய தவறு.
அந்தப் பணம் தனக்கு
வந்திருக்ககூடியதுதான் என்று
அந்த விவசாயி நம்பி
எடுத்து செலவழித்துவிட்டார். இதில்
அவர் மீது வங்கி
நிர்வாகம் போலீஸில் புகாரளித்தது. ஆனால், அவர் எடுத்து
வீடு கட்ட செலவழித்த
9
லட்சம் ரூபாயை எப்படி
வாங்குவது என்று இருதரப்புக்குமே தெரியவில்லை.

கூகுள் பே, பேடிஎம் போன்ற யூபிஐ பணப் பரிவர்த்தனைகளில் செய்வதற்கும் இது பொருந்துமா?

வங்கிப்
பரிவர்த்தனைக்காவது கணக்கு
விவரங்கள் தேவைப்படும். ஆனால்,
இவற்றில் அப்படியில்லை. இருப்பினும், தவறான திறன்பேசி எண்ணை
போட்டு, தவறான கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால், அதுகுறித்து அந்த முன்றாம் தரப்பு
பரிவர்த்தனை தளத்தைத் தொடர்பு
கொள்ள வேண்டும்.

அவர்கள்
இதைப் போலவே, தவறுதலாக
யாருக்கு பணத்தை அனுப்பினோமோ அவர்களின் கணக்கு எந்த
வங்கியில், எந்தக் கிளையில்
உள்ளது என்ற விவரங்களைக் கொடுப்பார்கள். பணப்
பரிவர்த்தனையைத் தவறுதலாகச் செய்தவர், அந்த வங்கிக்
கிளையில் சென்று, உரிய
ஆதாரங்களோடு எழுத்துப் பூர்வமாகக் கேட்க வேண்டும்.

அவர்கள்
மேற்கூறிய அதே நடைமுறையில், அவரிடம் கேட்பது, கேட்டும்
பணத்தைத் திருப்பி அனுப்பவில்லை என்றால், போலீஸ் புகாரை
அடிப்படையாக வைத்து வங்கிக்
கணக்கை ப்ரீஸ் செய்வது
போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

இருப்பினும், இங்கும் அதே நிலை
தான். யாருடைய வங்கிக்
கணக்குக்கு தவறுதலாகப் பணத்தைப்
போடுகிறீர்களோ, அவர்ளாகப்
பணத்தைத் திருப்பிக் கொடுத்தால்தான் உண்டு.வங்கியாக இருந்தாலும் சரி, மூன்றாம் தரப்பு
பரிவர்த்தனை தளமாக இருந்தாலும் சரி, இரண்டுமே தவறுதலாக
யாருக்கு பணம் அனுப்பப்பட்டது என்ற விவரங்களைத் தர
மாட்டார்களா? அவர்களுடைய வங்கியின்
பெயர் மற்றும் கிளை
விவரங்களை மட்டுமே கொடுப்பது
ஏன்?

அந்தக்
குறிப்பிட்ட தனிநபரின் வங்கிக்
கணக்கு விவரங்களையோ அவரைப்
பற்றிய விவரங்களைக் கொடுக்கவே
மாட்டார்கள். அது பல்வேறு
பிரச்னைகளுக்கு வழி
வகுக்கலாம். அப்படி தனிநபர்
தகவல் கிடைத்து, ஒருவருக்கொருவர் நேரடியாகச் சந்தித்து, அதில்
இருவருக்குள் பேச்சுவார்த்தை முற்றலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

வங்கிக்
கிளை மூலமாகத்தான் அணுக
வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கியின்
அதிகாரிகள்தான் அவரைத்
தொடர்புகொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள். அது சரிவரவில்லையெனில், நாம் போலீஸ்
புகார் கொடுத்து நகலைச்
சமர்ப்பித்த பிறகு, கணக்கை
ஃப்ரீஸ் வைத்து பணத்தைத்
திருப்பிக் கொடுக்குமாறு கேட்க
முடியும்.

ஆனால்,
சட்டத்தில் இதுகுறித்து எந்தவித
நெறிமுறையும் இல்லாத
காரணத்தால், அவரிடம் பணத்தைத்
திருப்பிக் கொடுக்குமாறு கேட்க
மட்டுமே முடியும். சட்டபூர்வ
நடவடிக்கை என்று இதில்
எதையும் மேற்கொள்ள முடியாது.

ஒருவர்
பணப் பரிமாற்றத்தை மாற்றிச்
செய்துவிட்டால், வங்கி
தரப்பிலிருந்து இயன்றவரை
உதவ மட்டுமே முடியும்.
ஆனால் பணத்தைப் பெற்றவராக
திருப்பித் தரவில்லை என்றால்
அதை மீண்டும் பெறுவது
மிகவும் சிரமம்தான். ஆகவே,
இணையவழியில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும்போது நன்றாகச்
சரிபார்த்து, கூடுதல் கவனத்தோடு
மேற்கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -