இதுவோ மின்னணு வர்த்தக காலம். அனைத்து பொருட்களும் கேட்ஜெட்களின் வழியே ஆர்டர் செய்யப்பட்டு வருகின்றன.
சமயங்களில் மின்னணு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதுண்டு. அந்த வகையில் அதிவிரைவில் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ஐபோன் 12 மாடலை விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது. அது நெட்டிசன்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்தியாவில் பண்டிகை காலம் கிட்டத்தட்ட தொடங்கி உள்ளது. நவராத்திரி விழா, தீபாவளி என வரும் நாட்களில் கோலாகலமாக பண்டிகைகள் கொண்டாடப்பட்ட உள்ளன. அதனை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் பண்டிகை கால சலுகை விற்பனை தொடர்ந்து அறிவித்த வண்ணம் உள்ளன.
நாட்டில் விரைவில் 5ஜி சேவைகள் அறிமுகமாக உள்ள சூழலில் பெரும்பாலானவர்கள் நல்ல 5ஜி ஸ்மார்போனை வாங்க வேண்டுமென விரும்புவார்கள் என்பதை உணர்ந்து கொண்ட இந்த நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சார்ந்து சலுகைகளை அறிவித்துள்ளன. அதிலும் ஐபோனை சலுகை விலையில் இந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமேசான் நிறுவனம் சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 12 போனை 40 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வழங்க உள்ளது. அதனை கவனித்த நெட்டிசன்கள் #iPhone12DealOnAmazon என ஹாஷ்டேக் போட்டு பகிர்ந்து வருகின்றனர். அமேசான் தள்ளுபடி விற்பனை வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.