EPFO கணக்கில் E-KYC ஐ எவ்வாறு புதுப்பிப்பது: மாத சம்பளத்தில் பிஎஃப் கழிக்கப்படும் நபராக நீங்கள் இருந்தால், இந்தத் தகவல் உங்களுக்கு நிச்சயமாக மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
பிஎஃப் கணக்கின் கெஒய்சி செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இதன் கீழ் இபிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை உட்பட வேறு சில முக்கிய ஆவணங்களின் தகவலை தங்கள் கணக்குடன் புதுப்பித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். இபிஎஃப்ஓ, கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் சில சிறந்த அம்சங்களை வழங்கியுள்ளது. இதன் உதவியுடன் உங்கள் இபிஎஃப் கணக்கின் கெஒய்சி-ஐ எங்கும் எந்த நேரத்திலும் புதுப்பிக்கலாம்.
இபிஎஃப் கணக்கில் கெஒய்சி-ஐப் புதுப்பிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
இபிஎஃப் கணக்கின்
கெஒய்சி-ஐப் புதுப்பிப்பதில் பல நன்மைகள் உள்ளன. நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் இபிஎப் கணக்கின் KYC-ஐ நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால், உங்கள் இபிஎஃப் கணக்கு தொடர்பான பல்வேறு ஆன்லைன் சேவைகளைப் பெற முடியாது. கெஒய்சி-ஐப் புதுப்பிக்காமல் உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவோ அல்லது இ-நாமினேஷனைத் தாக்கல் செய்யவோ முடியாது. இது தவிர, உங்களது பிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்யவும், அதாவது மாற்றவும் முடியாது.
பிஎஃப் கணக்கில் கெஒய்சி-ஐ எவ்வாறு புதுப்பிப்பது:
- முதலில் இபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ -க்கு செல்லவும்.
- இப்போது உங்கள் 12 இலக்க UAN எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
- லாக் இன் செய்த பிறகு, ஒரு புதிய பக்கம் திறக்கும். பக்கத்தின் மேலே ஒரு பச்சைப் பட்டி தோன்றும், அதில் Manage (நிர்வகி) என்று எழுதப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.
- Manage என்பதைக் கிளிக் செய்த பிறகு, நீங்கள் சில ஆப்ஷன்களைக் காண்பீர்கள். அதில் ஒரு ஆப்ஷன் ‘KYC’ ஆக இருக்கும். KYC ஐ கிளிக் செய்ய வேண்டும்.
- KYC ஐக் கிளிக் செய்த பிறகு, உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் திறக்கும். அங்கு நீங்கள் பல விருப்பங்களைக் காண்பீர்கள். இப்போது உங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களின் முன்னால் உள்ள செக் பாக்ஸ்களை கிளிக் செய்து, அவற்றின் விவரங்களை நிரப்பவும்.
- ஆதார், வங்கி மற்றும் பான் கார்டு விவரங்களை நிரப்புவது கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளவும்.
- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, கீழே உள்ள Save (சேவ்) பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- சேவ் என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்களின் அனைத்து விவரங்களும் ஒப்புதலுக்காக உங்கள் நிறுவனம் / முதலாளிக்கு அனுப்பப்படும். அதன் பிறகு, உங்கள் முதலாளி அதை அங்கீகரிப்பார். பின்னர் உங்கள் KYC விவரங்கள் புதுப்பிக்கப்படும்.