Thursday, December 19, 2024
HomeBlogஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் வீட்டிலையே சம்பாதிக்கலாம்!
- Advertisment -

ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் வீட்டிலையே சம்பாதிக்கலாம்!

ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் வீட்டிலையே சம்பாதிக்கலாம்!

பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். ஒரு சிலர் வேலைக்கு செல்கிறார்கள். சிலர் தங்களின் திறமையை கொண்டு சொந்தமாக தொழில் துவங்கி  நிர்வகித்து வருகிறார்கள். ஆனால் இவை இரண்டுமே இல்லாமல் சம்பாதிக்க முடியுமா ? என்பது பல பெண்களின் கேள்வியாக உள்ளது. குடும்ப சூழல் காரணமாக அவர்களால் அலுவலகத்திற்கோ அல்லது சொந்தமாக தொழில் துவங்கி அதை நிர்வகிக்கவோ முடியாத நிலை.


‘என்னால் வீட்டில் இருந்துகொண்டே வேலை செய்ய முடியும். அதற்கான வழி உள்ளதா?’ என்பது ஒரு சதவிகித பெண்களின் கேள்வியாக உள்ளது. இவர்களின் கேள்விக்கான விடைகளை இந்த ஆப்(app)கள் தருகின்றன. இதற்கு கம்ப்யூட்டர் அவசியமில்லை. ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன் இருந்தால் போதும். வீட்டில் இருந்தபடியே நீங்களும் சம்பாதிக்கலாம். அந்த ஆப்(app)கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மீஷோ (Meesho) – Click here to Download App
வீ ட்டில் இருந்து  வேலை செய்யுங்கள், சம்பாதியுங்கள், மீஷோ மூலம் மறுவிற்பனை செய்யுங்கள். இது தான் மீஷோவின் தாரக மந்திரம். எந்த முதலீடும் செய்யாமல் விற்பனை செய்து சம்பாதிக்கலாமா… எப்படி? ரொம்ப சிம்பிள்… உங்களின் வாட்ஸப் மற்றும் முகநூலில் மீஷோவின் மொத்த விலைப் பொருட்கள் (உதாரணத்திற்கு, சூரத் புடவைகள், குர்திக்கள், சூட்கள், அணிகலன்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள்) குறித்து பகிரவும்.
ஒவ்வொரு ஆர்டர்களுக்கும் கிடைக்கும் லாப வரம்பை பொருத்து உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் விற்பனை இலக்கு பொருத்து வாரா வாரம் ஒரு தொகை போனஸ் வெகுமதியாக கிடைக்கும். ஆம், மீஷோவுடன் இணைந்து வீட்டில் இருந்த படியே சம்பாதிப்பது எளிது. மீஷோ இந்தியாவின் நம்பர் 1 மறுவிற்பனை ஆப்(app).


மீஷோவில் இணைந்துள்ள 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மறுவிற்பனையாளர்களும் சம்பாதிக்கிறார்கள். இந்த ஆப்(app)பினை பெண் தொழில் முனைவோர்கள், இல்லத்தரசிகள், கல்லூரி மாணவர்கள், கடை உரிமையாளர்கள், அழகு கலை நிபுணர்கள், மொத்த வியாபாரிகள், பகுதி நேர வேலை தேடுபவர்களும் பயன்படுத்தலாம். முதலீடு இல்லாமல் வீட்டில் இருந்தபடியே வேலைப் பார்க்க விரும்பும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது.


மீஷோவில் மறுவிற்பனை செய்ய மூன்று எளிதான வழிகள்


1. முதலில் உங்களின் கைப்பேசியில் உங்களின் செல்போன் நம்பரை இணைத்து மீஷோ ஆப்(app)பினை டவுன்லோட் செய்யுங்கள். எங்களின் பிரபலமான மொத்த விற்பனை பொருட்கள் குறித்து ஆய்வு செய்யுங்கள். மேலும், பொருட்களின் படங்கள் மற்றும் அட்டவணை விவரங்களுடன் புதிய தயாரிப்புகள் குறித்து விளம்பர அறிவிப்புகள் பெறுங்கள்.           


2. இந்த பட்டியல்களை வாட்ஸப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கு பகிருங்கள். அதன் பிறகு ஆர்டர்கள் குறித்து கோரிக்கைகளை பெறுங்கள். மீஷோவின் பகிர்தல் வசதி மூலம் உங்களின் முகநூல் மற்றும் வாட்ஸப் பக்கங்களில் விற்பனை செய்வது மிகவும் எளிது.


3. வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர் பெற்றவுடன் பொருட்களுக்கான விற்பனை தொகையை உங்கள் வங்கிக் கணக்கிலோ அல்லது ஆன்லைன் வாலட்டிலோ (wallet) பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு மீஷோவின் சார்பில் உங்கள் கமிஷன் தொகையுடன் சேர்த்து வாடிக்கையாளர் பட்டியலில் உள்ள பொருட்களை ஆர்டர் செய்யுங்கள். மீஷோ மூலம் உங்களின் கமிஷன் தொகை மட்டும் இல்லாமல் ஒவ்வொரு விற்பனையில் உள்ள லாப வரம்பை பார்த்து வாரம் தோறும் போனஸ் தொகையும் சம்பாதிக்கலாம்.


மீஷோ ஆப்(app)  பயன்படுத்துவதின்  நன்மைகள்


1. குர்த்தாக்கள், போம் போம் புடவைகள், சூரத் புடவைகள், பட்டுப் புடவைகள், ஜெய்ப்பூர் படுக்கை விரிப்புகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், நகைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள லேட்டஸ்ட் பொருட்களை விற்பனை செய்யும் மொத்த சப்ளையர்களை மீஷோ மூலம் இணைக்க முடியும்.


2. மீஷோவில் உள்ள பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து நேரடியாக பெறப்படுவதால், அவை மூலதன விலையில் விற்கப்படுகிறது.


3. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை மட்டுமே மீஷோ வழங்குகிறது.


4. எளிதான வருமானம் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.


5. மீஷோ சம்மந்தமான கேள்விகள், ஆர்டர்கள் குறித்த சந்தேகங்கள், ஷிப்பிங் விவரங்கள், கமிஷன் குறித்த நிலைகள் அல்லது மறுவிற்பனை குறித்த அனைத்து சந்தேகங்களை இதில் உரையாடல் (chat) மூலம் தெரிந்து கொள்ளலாம்.


6.    விற்பனையாளரிடம் இருந்து பொருட்களை நேரடியாக பெற்று வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது மீஷோவுடைய பொறுப்பு.


7.    பொருட்களை பெற்ற பின்பு அதற்கான தொகை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும். மேலும் விற்பனைக்கான கமிஷன் தொகை உங்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.


8. ஒவ்வொரு வாரமும் தவறாமல் மறுவிற்பனைக்கான கமிஷன் உங்கள் வங்கிக் கணக்கில் வந்தடைந்துவிடும். அதே போல் நீங்கள் எடுக்கும் அதிகப் படியான ஆர்டர்களுக்கான போனஸ் தொகையும் உங்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.


9. உங்கள் பணம் எங்களிடம் பாதுகாப்பாக உள்ளது. பொருட்களை பெற்ற பிறகு மட்டுமே விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்தப்படும்.


10. மீஷோ கற்றல் பயிற்சி தளம் மூலம் உங்களின் வாடிக்கையாளர் வட்டத்தை எவ்வாறு அதிகப்படுத்தலாம் என்று குறிப்புகளும் ஆப்(app)பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் உங்களின் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களும் மீஷோவில் பாதுகாத்து வைக்கப்படும்.


க்ளோரோட் (GlowRoad) – Click here to Download App



எல்லா ஆப்(app)களை போல இதையும் முதலில் உங்களின் கைபேசியில் டவுன்லோட் செய்யுங்கள். அதன் பிறகு அதில் உள்ள உடைகள் குறித்த பட்டியல்களும் அனுப்பப்படும். பட்டியலில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் குறித்த விவரங்களை உங்கள் நண்பர்கள், தோழிகள் மற்றும் உறவினர்களுக்கு பகிரலாம். வாடிக்கையாளர்கள் பொருட்களை பெற்ற அடுத்த நிமிடம் உங்களின் கமிஷன் தொகை நேரடியாக உங்களின் வங்கிக் கணக்கில் பத்து நாட்களுக்குள் வந்துவிடும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்… பகிர்தல்…அதே போல் உங்களின் பணமும் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கும்.


வாடிக்கையாளர்கள் முழு திருப்தி அடைந்த பிறகு தான் பொருட்கள் அவர்களிடம் கொடுக்கப்படும். திருப்தி அடையாத பட்சத்தில் 100 சதவிகிதம் வாடிக்கையாளர்களின் தொகை அவர்களுக்கு செலுத்தப்படும். வாடிக்கையாளர்கள் பெறும் பொருட்களுக்கு நேரடியாகவும் தொகையை செலுத்தலாம். இதை தவிர PayTM மற்றும் Internet Banking வசதியும் உண்டு. நீங்கள் ஆர்டர் கொடுத்த பிறகு அந்த பொருட்கள் உங்களிடம் வந்த சேரும் வரை அதன் நிலை என்ன என்பது குறித்து உடனுக்குடன் கண்காணிக்கலாம். மறுவிற்பனை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வாடிக்கையாளர் சேவை மையம் வசதியும் உண்டு.


க்ளோரோட்டில் உங்களுக்கான ஆன்லைன் விற்பனைக்கூடத்திற்கான கணக்கினை துவங்க வேண்டும். அதில் நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள பொருட்களை குறித்த விவரங்களை மட்டுமே வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும். நீங்கள் மொத்த விற்பனையாளர் அல்லது உற்பத்தியாளர் என்றால் ஒரு நிமிடத்தில் க்ளோரோட் ஆப்(app) மூலம் உங்களின் தொழிலை 10 மடங்கு அதிகரிக்கலாம். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மறுவிற்பனையாளர்களுடன் ெதாடர்பு கொள்ளக்கூடிய வசதியும் இதில் உண்டு.

ஷாப் 101 (Shop 101) – Click here to Download App


ஷாப் மறுவிற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்களுக்கான ஆன்லைன் விற்பனைத் தளம். இந்த ஆப்(app) உங்கள் கைபேசியில் இருந்தால் போதும், ஒரு ரூபாய் முதலீடு இல்லாமல் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். பேஷன்களுக்கான இந்தியாவின் நம்பர் ஒன் மறுவிற்பனை ஆப்(app). வாட்ஸப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் உங்கள் வாடிக்கையாளரின் ஃபேஷனுக்கு ஏற்ப பொருட்களை விற்பனை செய்யலாம்.


இதை ஆரம்பிப்பது மிகவும் சுலபம். எப்போதும் போல் முதலில் ஆப்(app)பினை உங்க மொபைல் போனில் டவுன்லோட் செய்யுங்கள். அதன் பிறகு உங்களின் செல்போன் எண்ணை கொண்டு பதிவு செய்யுங்கள். பொருட்களை பகிருங்கள். இதில் நீங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு பொருட்களும் அதன் புகைப்படம் மற்றும் விலையுடன் பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்களின் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் பொருட்களை தேர்வு செய்து அவர்களிடம் பகிரலாம்.


வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்தவுடன் விற்பனை செய்யப்பட்ட தொகைக்கான கமிஷன் உங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் நீங்கள் செய்யும் ஒவ்ெவாரு விற்பனைக்கும் லாபத்தை கணக்கிட்டு மாதம் இறுதியில் ஒரு தொகை போனசாகவும் வழங்கப்படும். நீங்கள் எவ்வளவு பொருட்களை விற்பனை செய்கிறீர்களோ அவ்வளவு சம்பாதிக்கலாம்.


இந்த ஆப்(app)பின் சில முக்கிய அம்சங்கள்…


* இந்தியாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட தரமான பிராண்டுகளின் தயாரிப்புகள் தான் இங்கு பட்டியலிடப்பட்டு இருக்கும்.  


* ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கான பணம் நமக்கு கிடைக்குமா என்று பயப்பட தேவையில்லை. விற்பனை செய்ய அடுத்த இரண்டு நாட்களில் உங்களுக்கான தொகை வந்தடைந்துவிடும். அதே போல் வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை ஆர்டர் செய்து இருப்பார்கள். ஆனால் அதை பெற்ற பிறகு விருப்பம் இல்லாமல் திருப்பி கொடுத்துவிடுவார்கள். அந்த சமயத்தில் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் 100 சதவிகிதம் திரும்பி தரப்படும். உங்கள் வாடிக்கையாளர்களின் பொருட்களை அவர்களிடம் நேரடியாகவோ அல்லது கொரியர் மூலமோ ஒப்படைப்பது ஷாப்பர்ட்ஸ் பொறுப்பு. நீங்கள் விற்பனை மட்டும் செய்தால் போதும். 24/7 கஸ்டமர் சேவை மையம் செயல்படுவதால், வாடிக்கையாளர்கள் அவர்களின் சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து தெளிவு பெறலாம். விற்பனை செய்யுங்கள் சம்பாதியுங்கள்.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -