உங்கள் ஊரில் ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என தெரிந்துகொள்ள முதலில் https://www.tnpds.gov.in/ என இணையதளத்திற்குச் செல்லவும். இணையதளத்திற்கு சென்ற பிறகு பொது விநியோகத் திட்ட அறிக்கைகள் என்பதை கிளிக் செய்யவும்.
நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் ஊர் ரேஷன் கடை குறித்த விவரங்கள் அங்கு காண்பிக்கப்படும். அதில் கடை திறந்து உள்ளது என்றால் ஆன்லைன் என்றும், கடை திறக்கவில்லை என்றால் ஆப்லைன் என்று சிவப்பு நிறத்திலும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதுவே கடை திறந்து இருந்தால் ஆன்லைன் என பச்சை நிறத்தில் குறிப்பிடப்படு இருக்கும்.
உங்கள் ரேஷன் கடை இருப்பு நிலையையும் இந்த பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். அதற்கு பொருட்கள் இருப்பு நிலை என்பதை கிளிக் செய்தால் எந்த பொருட்கள் எவ்வளவு உள்ளது என்ற விவரங்கள் தெரிந்துகொள்ள முடியும். அதை வைத்து நீங்கள் எப்போது ரேஷன் கடை சென்று பொருட்களை வாங்குவது என முடிவு செய்துகொள்ளலாம்.
மேலும் இந்த பக்கத்தில் பொது மக்களின் புகார் என்பதை தேர்வு செய்யும் போது, அந்த பகுதி மக்கள் செய்த புகார்கள் குறித்த விவரங்கள் தெரியவரும். மேலும் அது தீர்க்கப்பட்டதா என்பதையும் தெரிந்துள்ள முடியும். மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, புதிய பயனரை சேர்ப்பது, கார்டு டிரான்ஸ்பர் செய்வது போன்றவற்றையும் www.tnpds.gov.in இணையதளத்தில் செய்ய முடியும்.