Amazon Great India Festival Salesல் தங்க ஆபரணங்களுக்கு அதிகபட்சமாக 30% வரை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி தங்கத்தை வாங்கி குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
Zeya 18K (750) என்பது தங்கத்தில் செய்யப்பட்ட அழகான சந்திரிகா மூக்குத்தி ஆகும். இந்த மூக்குத்தி அழகழகான வடிவமைப்பில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.3649. ஆனால் இதற்கு 24 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த மூக்குத்தியை அமேசானில் ரூ.2761க்கு வாங்கலாம்.
சென்கோ கோல்ட் ஆரா கலெக்சன் வகையில் 22 காரட் தங்க வளையலின் விலை ரூ.55115 ஆகும். ஆனால் 1 சதவீதம் தள்ளுபடியில் அமேசான் வழங்குவதால் 54230 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த வளையல் 22K தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு இதற்கு BIS ஹால்மார்க் மூலம் சான்றும் அளிக்கப்படும்.
அமேசானில் தங்க காதணிகளையும் மலிவான விலையில் வாங்கலாம். கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் அழகிய டிசைனில் உருவாக்கப்பட்ட 14K தங்க காதணிகள் 21% தள்ளுபடி விலையில் கிடைக்கும். இதன் ஒரிஜினல் விலை ரூ.8485 என்ற நிலையில் 21% தள்ளுபடியாக இந்த காதணிகள் ரூ.6655க்கு கிடைக்கும்.
பூக்களின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட ஜெய்லுகாஸ் காதணிகள் 22K தங்கத்தால் செய்யப்பட்டுள்ளன. இது BIS அடையாளத்தையும் கொண்டுள்ளது. இதன் ஒரிஜினல் விலை ரூ.12480 என்ற நிலையில் தற்போது14 சதவீதம் தள்ளுபடியில் 10732 ரூபாய்க்கு வாங்கலாம்.
கல்யாண் ஜூவல்லரியின் அழகான தங்கப்பதக்கமானது அதிகபட்சமாக 30% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.6035 என்ற நிலையில் 30% தள்ளுபடியின் காரணமாக ரூ.4224க்கு கிடைக்கும். இது வைரம் பதிக்கப்பட்ட நட்சத்திர வடிவ பதக்கமாகும்.
தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட மோதிரங்களும் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட ரோஸ் என்ற மோதிர டிசைனின் ஒரிஜினல் விலை ரூ.15629 என்ற நிலையில் இதில் 6 சதவீதம் தள்ளுபடியாக ரூ.14535க்கு கிடைக்கும்.