HomeBlogதொழில் முனைவோர் ஆக 50 சதவீத மானியம் - தூத்துக்குடி
- Advertisment -

தொழில் முனைவோர் ஆக 50 சதவீத மானியம் – தூத்துக்குடி

50 % subsidy to become entrepreneurs - Thoothukudi

TAMIL MIXER EDUCATION.ன்
தொழில்
செய்திகள்

தொழில் முனைவோர் ஆக 50 சதவீத மானியம் தூத்துக்குடி

தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியம் பெற்று புதிய தொழில் தொடங்கி தொழில் முனைவோர் ஆகலாம் என தூத்துக்குடி
கலெக்டர்
செந்தில்ராஜ்
ஒரு
செய்தி
குறிப்பில்
கூறியுள்ளார்.

மேலும் இது குறித்த அவர் கூறியிருப்பதாவது:

மத்திய அரசினுடைய நிதியுதவியுடன்
கூடிய
தேசிய
கால்நடை
இயக்கத்திட்டம்
செயல்படுத்தப்பட்டு
வருகின்றது.

இந்த திட்டத்தில் தொழில்முனைவோரை
உருவாக்குவதற்கு
50%
மானியம்
வழங்கப்பட்டு
வருகின்றது.
இதில்
சேர்ந்து
தொழில்
முனைவோராக
விரும்புவோர்
தனி
நபர்,
சுய
உதவிக்
குழுக்கள்,
உழவர்
உற்பத்தியாளர்
அமைப்புகளில்
தொழில்
முனைவோராக
உருவாக்க
மானியம்
வழங்கப்பட்டு
வருகின்றது.

மேலும் கிராமப்புற கோழிகள் இன மேம்பாட்டுக்கு
தொழில்
முனைவோரை
உருவாக்க
50%
மானியம்
அல்லது
ரூபாய்
25
லட்சம்
மானியம்
வழங்கப்பட்டு
வருகின்றது.
இதனை
அடுத்து
வெள்ளாடுகள்
அல்லது
செம்மறி
ஆடுகள்
இனவிருத்திக்காக
தொழில்
முனைவோரை
உருவாக்க
50%
மானியம்
அல்லது
அதிகபட்சம்
ரூபாய்
50
லட்சம்
மானியம்
வழங்கப்பட்டு
வருகின்றது.

இதனைத் தொடர்ந்து பன்றி வளர்ப்பில் தொழில் முனைவோரை உருவாக்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் ரூபாய் 30 லட்சம் மானியம் வழங்கப்பட்டு
வருகின்றது.

அது மட்டுமல்லாமல்
தீவன
உற்பத்தியை
பெருக்கவும்
சேமிப்பு
பிரிவு
அமைக்கவும்
50%
மானியம்
அல்லது
அதிகபட்சம்
ரூபாய்
50
லட்சம்
மானியம்
வழங்கப்பட்டு
வருவது
குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விருப்பமுள்ளவர்கள்
பொதுத்துறை
வங்கிகள்
மூலமாகவோ
அல்லது
சுயநிதி
நிறுவனத்திடம்
இருந்து
கடன்
பெற்றோ
இதனை
செயல்படுத்தலாம்.
மேலும்
சரியான
ஆவணங்களுடனும்
விரிவான
திட்ட
அறிக்கைகளுடனும்
உதய
மித்ரா
போர்ட்டலில்
பதிவேற்றம்
செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -