HomeBlogஅதிக லாபம் பெற ஜாதிக்காய் சாகுபடி - Business Idea
- Advertisment -

அதிக லாபம் பெற ஜாதிக்காய் சாகுபடி – Business Idea

அதிக லாபம் பெற ஜாதிக்காய் சாகுபடி - Business Idea

TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)

அதிக லாபம்
பெற
ஜாதிக்காய் சாகுபடி

ஜாதிக்காய் எந்த மண்ணில் வளரும்

ஜாதிக்காய் மரம் ஆனது நல்ல
வடிகால் வசதியுள்ள எல்லா
வகை மண் நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டது.
ஜாதிக்காயில் ஆண்
மரம், பெண் மரம்
என இரண்டு வகை
உண்டு. ஈர காற்று
அதிக வீசும் இடங்களில்
நன்றாக வளரும் தன்மையுடையது.

ஜாதிக்காய், நிழல் உள்ள இடங்களில்
செழிப்பாக. மேலும் இம்மரத்தை
தென்னை, பாக்கு, ரப்பர்
போன்ற தோப்புகளில் ஊடுபயிராக
சாகுபடி செய்யலாம்.

இம்மரமானது அதிக பனி பொழியும்
இடங்களில் வளராது மற்றும்
உப்பு தண்ணீரில் வளர்ச்சி
குறைவாக காணப்படும். இம்மரம்
சுமார் 20 அடி உயரம்
வரை வளரக்கூடியதாகும்.

ஜாதிக்காய் நடவு செய்யும் முறை

ஜாதிக்காய் விதை முளைக்க 6 வாரம்
ஆகும். முளைத்த பிறகு,
ஆறு மாதம் வரை
நன்கு பராமரிக்க வேண்டும்.
பின்பு ஆறு மாத
கன்றுகளை தொட்டிகளில் மாற்றி
வைக்க வேண்டும். ஒரு
வருடம் முடிந்தவுடன் நடவுக்கு
பயன்படுத்தலாம்.

ஜாதிக்காய் கன்றை நடவு செய்வதற்கு முன்பாக ஒன்றரை அடி
சதுரம், ஒன்றைய அடி
ஆழத்தில் குடிகளை தோண்ட
வேண்டும். அதன்பிறகு ஒவ்வொரு
குழிகளுக்கும் 2 கிலோ
சாணம் மற்றும் 100 கிராம்
வேப்பம் புண்ணாக்கு இட
வேண்டும். கன்றுகள் நட்ட
உடனே தண்ணீரை பாய்ச்ச
வேண்டும்.

ஜாதிக்காய் பராமரிக்கும் முறை:

ஜாதிக்காய் நடவு செய்த பிறகு
நான்கு நாட்களுக்கு ஒரு
முறை தண்ணீரை பாய்ச்ச
வேண்டும். ஒரு ஆண்டுக்கு
மேல் உள்ள செடிகளுக்கு தினமும் 10 லிட்டர் தண்ணீர்
கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு
ஆண்டும் மரத்திற்கு கொடுக்கும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த வேண்டும். ஜாதிக்காய் வளர்ப்புக்கு சொட்டு நீர் பாசனம்
சிறந்ததாகும்.

அதேபோல்
மாதம் ஒருமுறை செடிகளுக்கு நடுவில் வளர்ந்துள்ள கலைகளை
எடுக்க வேண்டும். இம்மரம்
அதிக நோய் எதிர்ப்பு
சக்தி கொண்டதால் நோய்
தாக்குதல் இருக்காது.

ஜாதிக்காய் மரத்திற்கு ஆண்டுக்கு இரண்டு
முறை அடிஉரமாக 30 கிலோ
வரை தொழு உரம்
கொடுக்க வேண்டும். ஜாதிக்காய் மரம் ஆனது ஒன்றரை
வருடத்தில் நான்கு அடி
வரை வளரும்.

ஜாதிக்காய் அறுவடை முறைகள்:

ஜாதிக்காய் வெடிக்க தொடங்கும் போது
அறுவடை செய்யலாம். அறுவடை
செய்த காய்களில் இருந்து
ஜாதிப்பத்திரையையும் காயையும்
தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.

மேலும்
7
ஆண்டுகளில் ஜாதிக்காய் மகசூல்
கொடுக்கத் தொடங்கும். ஒரு
மரத்திலிருந்து சராசரியாக
10 Kilo
ஜாதிக்காய் மற்றும் இரண்டு
Kilo
பத்ரியும் கிடைக்கும்.

அவ்வாறு
கிடைக்கும் ஜாதிபத்திரி மற்றும்
காய்களை நிழலில் காய
வைத்து தேவைக்கு ஏற்ப
விற்பனை செய்து அதிக
லாபம் பெறலாம்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -