‘வரும், 15ல், ‘காசு கொழிக்கும் காளான் வளர்ப்பு’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது’ என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 15 காலை, 10:00 மணிக்கு, ‘காசு கொழிக்கும் காளான் வளர்ப்பு’ என்ற தலைப்பில், ஒரு நாள் பயிற்சி நடக்கிறது.இப்பயிற்சியில், லாபம் தரும் காளான் வளர்ப்பு முறை, விதை உற்பத்தி, காளானின் வகைகள், காளான் வளர்க்கப்படும்போது ஏற்படும் இடர்பாடுகளும், தீர்வுகளும், காளானில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறை மற்றும் விற்பனை செய்யும் முறை குறித்து விளக்கப்படுகிறது.படித்து வேலையில்லாத பட்டதாரிகள், ஆர்வமுள்ள விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவியரும் பங்கேற்கலாம்.
முதலில் வரும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்கள், 200 ரூபாய் பணம் செலுத்தி, தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது, 04286-266345, 95977-46373, 70105-80683, 99430-08802 என்ற தொலைபேசி மற்றும் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.