மத்திய அரசு பெண்களுக்கு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படி கொண்டு வரப்பட்ட முக்கிய சேமிப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.
தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.
ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் இந்த கணக்கை தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கு 10 வயதுக்குட்பட்டு இருக்க வேண்டும். குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க இதற்கு முன் வயது 10-ஆக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.
10-வயதுக்கு முன்பாகவே பெண் இறந்தால், அல்லது வேறு எதாவது நோயால் அவதிப்பட்டு வந்தால் கணக்கை முடித்துக் கொள்ளலாம். ஆனால் முன்பு, பெண் இறந்தால் மட்டுமே கணக்கை மூட முடியும். இந்த திட்டத்தில் சேர்ந்தால் 250 ரூபாய் செலுத்தாவிட்டாலும் வட்டி தொடர்ந்து வரும். ஆனால் முன்பு அப்படி இல்லை. கணக்கு தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகள் வரை சேமிப்புத் தொகையை செலுத்தினால் போதும். டெபாசிட் தொகை 21 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும். அந்த சமயத்தில் நீங்கள் செலுத்திய தொகையில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு தொகை உங்களுக்கும் அதிகமாக கிடைக்கும்.
ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதே சமயம் மூன்றாவது குழந்தை பிறந்தால் கூட மூன்று குழந்தைகள் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதல் இரண்டு பெண் குழந்தை இரட்டை குழந்தையாக பிறந்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.